AI பொய் சொல்லும்.. அதை அப்படியே நம்ப வேண்டாம்.! வெளிப்படையாக எச்சரித்த சுந்தர் பிச்சை
சியாட்டில்: ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் மார்கெட்டை பிடிக்கப் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகிறது. இருப்பினும், AI தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட பிழைகள் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ டூல்கள் நிச்சயம் தவறு செய்யும் என்றும் அதை 100% நம்ப வேண்டாம் என்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார்.
சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகெங்கும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏஐ மார்கெட்டை பிடிக்கவும் சாட்ஜிபிடி, ஜெமினி (கூகுள்), க்ராக் (எக்ஸ்), பெர்பிளக்ஸிட்டி எனப் பல்வேறு நிறுவனங்களும் முயன்று வருகின்றன.

ஏஐ பதில்கள்
அதேநேரம் ஏஐ கொடுக்கும் பதில்களில் பல பிழைகள் இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதை அவர்கள் AI hallucinations என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இல்லாத ஒன்றை ஏஐ டூல்களே கற்பனை செய்து கொண்டு பதிலைச் சொல்கிறது. அவசர கதியில் ஏஐ டூல்களை உருவாக்குவது இந்தப் பிரச்சனையை அதிகரிப்பதாகப் பலரும் எச்சரிக்கிறார்கள்
இதற்கிடையே கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஏஐ தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஐ தொழில்நுட்பங்கள் சொல்வதை அப்படியே நம்பக்கூடாது என்று சொன்ன அவர், ஏஐ டூல்களும் சில சமயங்களில் தவறுகளைச் செய்யும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஏஐ டூல்கள் எப்போதுமே மற்ற கருவிகளுடன் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்றும் அதையே முழுமையாக நம்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பக் கூடாது
இது தொடர்பாகச் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், "நீங்கள் ஆக்கப்பூர்வமாக எதையாவது எழுத விரும்பினால் நிச்சயம் ஏஐ டூல்கள் உங்களுக்கு யூஸ் ஆகும். இருப்பினும், ஏஐ கொடுக்கும் நல்ல விஷயங்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.. அவை சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
எங்கள் ஏஐ டூல்கள் முடிந்தவரை துல்லியமான தகவல்களை வழங்குகிறது. மற்ற ஏஐ டூல்கள் உடன் ஒப்பிடுகையில் எங்கள் ஏஐ துல்லியமான தகவல்களை வழங்குகிறது. ஆனாலும் தற்போதைய அதிநவீன AI தொழில்நுட்பத்தில் சில தவறுகள் ஏற்படவே செய்யும். அதை நான் மறுக்கவில்லை. இதன் காரணமாகவே ஏஐ சொல்வதை மட்டும் நம்பாமல் பிற சோர்ஸ்களையும் சரி பார்க்கச் சொல்கிறோம். குறிப்பாகப் பொதுமக்கள் கூகுள் சேர்ச்சை பயன்படுத்துவதற்கும் இதுவே காரணம். இது தவிரத் துல்லியமான பெற வேறு டூல்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்" என்றார்.
தவறு செய்யும்
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏஐ டூல்கள் நிச்சயம் தவறு செய்யும் என்பதை அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதனால் ஏஐ டூல்கள் சொல்வதை 100% அப்படியே நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது சொல்லும் தகவல்களைக் கூகுள் சேர்ச் அல்லது வேறு சோர்ஸ்களில் இருந்து செக் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்ப்பு
இருப்பினும், துறை சார்ந்த வல்லுநர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். கூகுளை போன்ற நிறுவனம் ஒரு டூலை வழங்கும்போது அதன் சொல்லும் பதில்களை யூசர்கள் செக் செய்ய வேண்டும் எனச் சொல்வது அபத்தமானது என்கிறார். மேலும், கூகுள் நிறுவனமே தனது ஏஐ டூல் சொல்லும் தகவல்களைச் சரிபார்க்கும் ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications