Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்துமீறும் AI? ஜெமினி உருவாக்கி தந்த ரெட்ரோ ஸ்டைல் போட்டோ! உற்று பார்த்ததும் அதிர்ந்து போன இளம்பெண்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூகுள் ஜெமினி ஏஐ-இல் ரெட்ரோ ஸ்டைல் போட்டோக்களை உருவாக்கி, அதை இணையத்தில் பகிர்வதே இப்போது டிரெண்டாக இருக்கிறது. அப்படி ரெட்ரோ ஸ்டைல் போட்டோவை பெண் ஒருவர் உருவாக்கி இருந்த நிலையில், அதில் இருந்த ஒரு விஷயத்தைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டாராம். இது குறித்து நாம் பார்க்கலாம்.!

ஏஐ வந்த பிறகு திடீர் திடீரென எதாவது ஒரு விஷயம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அப்படித் தான் இப்போது ஜெமினி ஏஐ-இல் நானோ பனானா ஏஐ இமேஜ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. முதலில் இதில் 3டி மாடல்களை போன்ற போட்டோக்கள் இணையத்தைத் தெறிக்கவிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது பழங்கால ரெட்ரோ ஸ்டைல் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Google Gemini Nano Banana AI Saree Trend Woman s Creepy Mole Discovery Why it sparked concern

புடவை டிரெண்ட்

பலரும் இந்த ஸ்டைலில் ஆர்வமாக போட்டோக்களை உருவாக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இந்த ஸ்டைலை மிகவும் விரும்புகிறார்கள். அப்படித் தான் இங்குப் பெண் ஒருவர் ஜெமினி ஏஐ-இல் ரெட்ரோ போட்டோவை உருவாக்கியுள்ளார். ஏஐ மாடல் உருவாக்கித் தந்த அந்த மாடல் பார்க்க அழகாக இருந்தாலும் அதை உற்றுக் கவனித்த போது இவர் அதிர்ந்து போய்விட்டார்.

ஜலக் பவானி என்ற பெண்தான் தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பச்சை நிற சல்வாரில் இருந்த போட்டோவை ஏஐ மாடலில் பதிவேற்றி, அதை ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கித் தரச் சொல்லியிருக்கிறார். ஜெமினி ஏஐ மாடலும் அதை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றி கொடுத்துள்ளது. ஏஐ கொடுத்த போட்டோ அழகாக இருந்தாலும், அதில் இருந்த ஒரு சின்ன விவரம் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

இடது கை மச்சம்

அதாவது ஜெமினி ஏஐ மாடல் உருவாக்கிக் கொடுத்த போட்டோவில் அவருக்கு இடது கையில் மச்சம் இருப்பது போலத் தெரிகிறது. அவருக்கு நிஜமாகவே அங்கு மச்சம் இருக்கும் நிலையில், ஏஐ-இல் அது வந்துள்ளது. ஆனால், விஷயம் என்னவென்றால் அவர் ஏஐ-இல் பதிவிட்ட பச்சை சல்வார் போட்டோவில் அந்த மச்சம் தெரியவே இல்லை. அப்படி இருக்கும்போது தனக்கு கையில் மச்சம் இருப்பது ஏஐ-க்கு எப்படித் தெரிந்தது எனக் கேட்டிருக்கிறார் பவானி.

பயமாக இருக்கிறது

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜெமினி போட்டோவில் இருப்பது போல என் இடது கையில் மச்சம் உள்ளது. ஆனால், நான் பதிவிட்ட போட்டோவில் முழு கை பச்சை சல்வார் அணிந்திருப்பேன். அதில் கையில் இருக்கும் மச்சம் தெரியாது. அப்படியிருக்கும்போது எனது உடலில் இந்தப் பகுதியில் மச்சம் இருப்பதை ஜெமினி எப்படி தெரிந்து கொண்டது" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது பயத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள பவானி, இதுபோன்ற ஏஐ தளங்களில் எந்த மாதிரியான போட்டோக்களை பதிவிடுகிறீர்கள் என்பது குறித்து கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நெட்டிசன்கள் தந்த விளக்கம்

பவானியின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. நெட்டின்சன்கள் பலரும் இது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் ஏஐ எப்படி வேலை செய்கிறது என்பது குறித்தும் விளக்கியுள்ளனர். ஒரு நெட்டிசன், "ஏஐ இப்படித் தான் வேலை செய்யும்.. உங்கள் டிஜிட்டல் புட்பிரிண்டில் இருந்தும், நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றிய அனைத்துப் படங்களிலிருந்தும் தகவல்களைப் பெறுகிறது. உங்கள் மச்சம் மற்ற போட்டோக்களில் தெரிந்து இருக்கும். அதை வைத்தே இமேஜ்ஜை உருவாக்கி இருக்கும்" என்றார்.

டிஜிட்டல் புட்பிரிண்ட்

நாம் பொதுவாகப் பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களிலும் நம்மை அறியாமலேயே பல முக்கிய தகவல்களைப் பகிர்வோம். இதுபோல நம்மை பற்றி இணையத்தில் இருக்கும் தகவல்களை டிஜிட்டல் புட்பிரிண்ட் என அழைக்கப்படும். அதையெல்லாம் வைத்தே ஏஐ போட்டோக்களை உருவாக்கும் என்று இவர் கூறியிருக்கிறார்.

மற்றொரு நபர், "இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.. உங்கள் அனைத்துப் படங்களும் கூகுள் போட்டோஸில் இருக்கும். ஜெமினி உங்கள் பழைய படங்களையும் அனலைஸ் செய்தே இந்த ரெட்ரோ ஸ்டைல் போட்டோவை உருவாக்கி இருக்கும்" என்றார். ஜிமெயில், டிரைவ், போட்டோஸ் என அனைத்தும் இணைக்கப்பட்டு இருப்பதால் அந்த டேட்டாவை ஜெமினி யூஸ் செய்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+