2025ல் அதிகம் தேடப்பட்ட AI டூல்கள்.. அடித்து தூக்கிய கூகுள்.. சர்ப்ரைஸ் தந்த தமிழரின் நிறுவனம்!
டெல்லி: ஏஐ பயன்பாடு உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு இல்லை. இதற்கிடையே நமது நாட்டில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட ஏஐ டூல்கள் குறித்த தகவல்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட் முழுக்க சர்ப்ரைஸாகவே இருக்கிறது. இதில் கூகுள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சாட்ஜிபிடி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்த 2025ம் ஆண்டில் கடைசி மாதத்திற்கு நாம் வந்துவிட்டோம். இதற்கிடையே கூகுளில் அதிகம் தேடப்பட்டவை என்ன என்பது குறித்த ரிப்போர்ட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உலகில் எதில் ஆதிக்கம் செலுத்தியது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தாண்டு செர்ச்-இல் கூட ஏஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

ஏஐ டூல்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சாட்ஜிபிடி இந்தத் துறையில் முதலில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஜெமினி, க்ரோக் (Grok), பெர்ப்ளெக்சிட்டி (Perplexity), டீப்ஸீக் (DeepSeek) என பல்வேறு ஏஐ டூல்கள் வந்துவிட்டன. இதற்கிடையே இந்தியாவில் இந்தாண்டு மக்கள் எந்த ஏஐ டூலை அதிகம் தேடினர் என்பது குறித்த லிஸ்ட்டை கூகுள் வெளியிட்டுள்ளது.
நம்மில் பெரும்பாலும் சாட்ஜிபிடியே இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஏஐ ஆக இருக்கும் என நினைப்போம். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. இந்தாண்டு கூகுளின் ஜெமினி தான் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட AI கருவியாக இருக்கிறது. இந்தியர்கள் ஏஐ டூல்களை தங்கள் தினசரி பயன்பாட்டிற்கு யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுகிறது.
ஆதித்தம் செலுத்தும் கூகுள்
ஏஐ என்று இல்லை ஒட்டுமொத்தமாகக் கூகுளில் அதிகம் இந்தாண்டு தேடப்பட்ட லிஸ்ட்டில் ஜெமினி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் மட்டுமே இதை விட மக்கள் அதிகம் தேடிய ஒன்றாக இருக்கிறது. ஏஐ என்பது வெறுமன ஹைப் மட்டும் இல்லை. அது இப்போது அத்தியாவசியமானதாக மாறி விட்டதையே இது காட்டுகிறது. கூகுளின் 'நானோ பனானா' (Nano Banana) கூட டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
தமிழருக்கு அங்கீகாரம்
கூகுள் ஜெமினி என இல்லை பல ஏஐ டூல்களை மக்கள் அதிகம் தேடியுள்ளனர். இதில் இரண்டாவது இடத்தில் ஜெமினி ஏஐ ஸ்டுடியோ இருக்கிறது. அடுத்த மூன்றாவது இடத்தில் எலான் மஸ்கின் ட்விட்ருடன் இணைந்து இயங்கும் க்ரோக் (Grok) வருகிறது. அடுத்து 4வது இடத்தில் சீனாவுக்கு சொந்தமான டீப்சீக் வருகிறது. 5வது இடத்தில் தமிழரான அரவிந்த் சீனிவாசன் நடத்தி வரும் ஆரம்பித்த பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) வருகிறது. இதுதான் டாப் 5 இடங்களில் வருகிறது. விஷயம் என்னவென்றால் சாட்ஜிபிடி டாப் 5 இடங்களில் கூட வரவில்லை
சாட்ஜிபிடி நிலைமை மோசம்
அடுத்து 6வது இடத்திலும் கூட மீண்டும் கூகுள் தான் வருகிறது. கூகுள் ஏஐ ஸ்டுடியோ இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் உலகெங்கும் பேசுபொருளாக இருந்த சாட்ஜிபிடி இந்த லிஸ்டில் 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சாட்ஜிபிடி இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் கூட அதன் பயன்பாடு கடுமையாகக் குறைந்துள்ளதையே இது காட்டுகிறது. 8வது இடத்தில் Chatgpt Ghibli art வருகிறது. இந்த பட்டியலில் 9 மற்றும் 10வது இடத்தில் flow மற்றும் Ghibli Style Image generator ஆகியவை வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications