பெங்களூரில் முதல் AI நகரம்.. பிடதியில் அமைகிறது.. ஸ்பெஷலே இதுதான்.. அசத்தும் கர்நாடக அரசு!
பெங்களூர்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் இங்கும் எலக்ட்ரானிக் பொருட்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் கர்நாடக அரசு ஒரு படி மேலே சென்று, முழுமையாக ஏஐ-ல் இயங்கும் நகரத்தை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த நகர் பெங்களூர் அருகே உள்ள ராமநகர் மாவட்டம் பிடதியில் (Bidadi) அமைய உள்ளது.
பெங்களூருவில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் நகரம் உருவாக்கப்படவுள்ளது. இதற்காக கர்நாடக அரசு பெங்களூருவுக்கு அருகில் உள்ள ராமநகர் மாவட்டம் பிடதியில் (Bidadi) பிரமாண்டமான "கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த நகர்ப்புறத் திட்டம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நேற்று இதை அறிவித்தார்.

சுமார் 9,000 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ற நகரமாக உருவாகும் என்றும், இது "பணிபுரிதல், வாழ்தல், விளையாடுதல்" (work-live-play) என்ற மாதிரி அடிப்படையில் வடிவமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெங்களூருவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ள இந்த நகரம், மாநிலத்தின் இரண்டாவது மத்திய வணிக மாவட்டமாக செயல்படும். இதில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம், ஏஐ சார்ந்த தொழில்களுக்கும், அதனுடன் தொடர்புடைய உற்பத்தி அலகுகளுக்கும் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகரத்தை மற்ற நகரங்களோடு இணைக்க, 300 மீட்டர் அகலமுள்ள ஒரு வணிக வழித்தடம், STRR, NH-209, NH-275 மற்றும் NICE சாலை போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளை ஏஐ நகரத்தோடு இணைக்கப்பட இருக்கிறது.
ராமநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடையே பேசிய டி.கே சிவகுமார், "இந்தத் திட்டம் நியாயமான இழப்பீட்டுடன், சட்ட வரம்பிற்குள்ளேயே தொடரும். கடந்தகால தவறுகளை நான் திரும்பச் செய்ய மாட்டேன். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா நில பிரச்சனையில் சிறைக்குச் சென்றது போல், நான் சிறைக்குச் செல்ல தயாராக இல்லை. உலகளாவிய முதலீட்டாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஈர்ப்பதுடன், தகவல் தொழில்நுட்பம், ஏஐ மற்றும் சேவைத் துறைகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை இந்த நகரம் உருவாக்கும். கர்நாடக இளைஞர்களை AI சார்ந்த தொழில்களுக்கு தயார்படுத்த, பயிற்சி மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
பொருளாதார நடவடிக்கைகளை பிடதிக்கு மாற்றுவதன் மூலம், பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை இந்த நகரம் குறைக்கும். இந்த நகரில், ரிங் சாலைகள், விரைவுச் சாலைகள் இருக்கும். மிக முக்கியமாக "பணிக்கு நடந்தே செல்லும்" (walk-to-work) வகையில் இந்த நகரம் திட்டமிடப்பட்டு வருகிறது. 1,100 ஏக்கருக்கும் அதிகமான பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளுடன், இது இந்தியாவின் பசுமையான நகரங்களில் ஒன்றாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2006ம் ஆண்டில் எச்.டி. குமாரசாமியின் பதவிக் காலத்தில் முதலில் முன்மொழியப்பட்ட இந்த திட்டம், டெவலப்பர்கள் விலகியதாலும், கொள்கை சிக்கல்களாலும் பலமுறை தாமதமானது. பின்னர் 2023ம் ஆண்டில் கிரேட்டர் பெங்களூரு, பிடதி ஸ்மார்ட் சிட்டி திட்டமிடல் ஆணையம், கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையமாக மேம்படுத்தப்பட்ட பிறகு திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மார்ச் மாதத்தில் முதற்கட்ட நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது இத்திட்டம் ஒன்பது கிராமங்களில் 8,493 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இதில் 6,731 ஏக்கர் தனியார் நிலம், 750 ஏக்கர் அரசு நிலம் மற்றும் 1,012 ஏக்கர் நீர்நிலைகள் அடங்கும். நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு 70% மக்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இன்னும் 30% மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது.
இந்த நகரத்தில் ஏஐ என்னென்ன செய்யும்?
போக்குவரத்து, எரிசக்தி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றை AI-powered சேவைகள் மூலம் தானியங்கி முறையில் நிர்வகிக்கும். 'டிஜிட்டல் ட்வின்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, AI எதிர்கால தேவைகளை முன்கூட்டியே கணித்து, நகரத்தின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும். ஸ்மார்ட் சென்சார்கள் மூலம் நகரத்தின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும். அதேபோல கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டிய நேரத்தைக் கண்டறிந்து, குப்பை வாகனங்களை வழிநடத்தும்.
இதில் 'டிஜிட்டல் ட்வின்' என்கிற ஏஐ தொழில்நுட்பம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு இயந்திரம் இயங்குகிறது எனில், அது எவ்வளவு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது? எவ்வளவு அழுத்தத்தை எதிர்கொள்கிறது? எவ்வளவு அதிர்வுகளை எதிர்கொள்கிறது என்பதை சென்சார்கள் மூலம் அளப்பார்கள். சென்சார்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள், கம்ப்யூட்டருக்கு செல்லும். அங்கு இயந்திரத்தின் மாதிரி உருவாக்கப்படும். பின்னர் அது இயக்கி பார்க்கப்படும். இப்படி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் உண்மையான இயந்திரத்தில் எந்த மாதிரியான தேய்மானம் ஏற்படும்? அதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துக்கொள்ள முடியும்.
அதேபோலத்தான் பிடதி ஏஐ ஸ்மார்ட் சிட்டியில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதன் மூலம் மக்கள் தொகை எவ்வளவு? மின்சார கம்பிகள், சாலைகள், குடிநீர், மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் குழாய் அமைப்புகள், வீடுகள் ஆகியவை எங்கு அமைந்திருக்கின்றன? என்பது சென்சார்கள் மூலம் கண்காணிக்கப்படும். அதை வைத்து குறிப்பிட்ட பகுதியில் புதியதாக சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
நகரத்தில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பங்களில் இது ஒரு சிறிய பகுதிதான் இதுபோல பல ஏஐ தொழில்நுட்பங்கள் இந்த நரகத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications