இந்திய IT துறைக்கே டூம்ஸ்டே ஆபத்து.. மிக பெரிய சம்பவம் செய்யும் AI.. பேரழிவு நெருங்குதே!
சென்னை: ஏஐ வருகை உலகளவில் வேலைவாய்ப்பு சந்தையைப் புரட்டிப் போடும் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிக முக்கிய வேலைவாய்ப்புத் துறையாக இருக்கும் ஐடி சர்வீஸ் ஏஐ வருகையால் மிகப் பெரியளவில் அடிவாங்கும் என அஞ்சப்படுகிறது. பலரும் ஏஐ மொத்தமாக இந்திய ஐடி சந்தையையே காலி செய்துவிடும் என்றும் அஞ்சுகிறார்கள்.
AI தொடர்பாக அது இந்திய ஐடி சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பாக Citrini Researchஇன் "தி 2028 குளோபல் இன்டெலிஜென்ஸ் க்ரைசிஸ்" ரிப்போர்ட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றி பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆடோமேஷன்
2028க்குள் செயற்கை நுண்ணறிவு ஆடோமேஷன் காரணமாக மிகப் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அத்தோடு நிற்காது தொடர் சங்கிலி நிகழ்வாகப் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளையும் உருவாக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்தியாவின் ஐடி செக்டாருக்கு ஏஐ காரணமாக டூம்ஸ்டே ஆபத்து இருப்பதாகவும் அழிவை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு $200 பில்லியனுக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஐடி சேவைத் துறை ஏஐயால் முடங்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக AI கோடிங் ஏஜென்ட்கள் இருக்கலாம் என்கிறார்கள். அவை மிகக் குறைந்த செலவில், அதேநேரம் மிகத் திறமையாக வேலை செய்வதால் ஏஐ கோடிங் செய்வோர் தேவையற்றவர்களாக மாறும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிக்கல் என்ன
அந்த ரிப்போர்ட்டில் மேலும்,"அமெரிக்கரை விட இந்திய டெவலப்பர்கள் குறைந்த செலவில் கிடைப்பார்கள் என்பதே இந்த இந்திய ஐடி மாடலின் அடிப்படை. ஆனால், அதை ஏஐ கோடிங் ஏஜெண்ட் காலி செய்துவிடும். ஒரு AI கோடிங் ஏஜென்ட்டின் செலவு என்பது கிட்டத்தட்ட மின்சாரத்தின் செலவுக்கு இணையானது மட்டுமே எனவே டெவலப்பர்கள் தேவைப்பட மாட்டார்கள். இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தங்கள் ஒப்பந்தங்களை இழக்கலாம்.
மேலும், ஐடி சர்வீஸ் ஏற்றுமதி தான் இந்தியாவுக்கு மிக முக்கிய அந்நியச் செலாவணியாக இருக்கிறது. அதை இல்லாமல் போய்விட்டால், நான்கு மாதங்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 18% சரியும். இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும். இந்த நிலை ஏற்பட்டால் 2028 முதல் காலாண்டுக்குள், சர்வதேச நாணய நிதியம் பொருளாதாரச் சூழல் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு நிலைமை போய்விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிற்கவே நிற்காது
AI வருகை ஒருவித இயற்கையான தடையில்லா தொடர் சுழற்சியை உருவாக்கியதாக அந்த ரிப்போர்ட் கூறியுள்ளது. மக்கள் குறைவான செலவு செய்தாலும், நிறுவனங்கள் AIயில் முதலீடுகளை அதிகரிக்கிறார்கள். அதாவது, "AI வந்ததும், அடிப்படை ஊழியர்களைப் பெரு நிறுவனங்கள் நீக்குகின்றன.. பணிநீக்கம் செய்து, அந்தச் சேமிப்பில் மேலும் AI மாடல்களில் முதலீடு செய்கின்றன. இதனால் ஏஐ மேலும் வளர்க்கிறது. இது மேலும் பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கிறது.
பொருளாதாரமே பாதிக்கப்படும்
மேலும், வேலை இழந்தோர் குறைவான பணத்தையே செலவு செய்வார்கள். இதனால் பொருளாதாரமே பாதிக்கப்படும். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை விட AI மேம்பட்டு மலிவானது. பணம் அங்குப் போகும்போது பொருளாதாரம் பாதிக்கும். இது இயற்கையாகவே ஒரு தடையில்லாத ஒரு தொடர் சுழற்சியை உருவாக்குகிறது. இது பொருளாதாரச் சரிவை மேலும் தீவிரப்படுத்தும்" என்றார்.
தற்போதும் கூட இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் கூட ஐடி சர்வீஸ் செக்டார் மிகக் கடுமையாக அடிவாங்கியுள்ளது. ஆனால், ஏஐ மற்றும் சிப் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் NVIDIA, TSM உள்ளிட்ட நிறுவனங்களில் லாபம் கொட்டுகிறது. இதுவே எதிர்காலம் எப்படிச் செல்லும் என்பதை நமக்குக் காட்டுவதாக இருக்கிறது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications