வெடிக்க போகுது AI பப்பிள்.. வேலையிழப்பு மோசமாக இருக்கும்.. எச்சரிக்கும் அமேசான் நிறுவனர் பெசோஸ்
சியாட்டில்: இந்தக் காலத்தில் ஏஐ துறை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதேநேரம் ஏஐ துறையில் பல்வேறு ரிஸ்குகளும் அதிகமாக இருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான அமேசான் சிஇஓ ஜெஃப் பெசோஸ் இது குறித்து சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தக் காலத்தில் உலகின் எல்லாப் பக்கமும் ஏஐ குறித்தே பேச்சு இருக்கிறது. ஏஐ வளர்ச்சி, அது உலகை எப்படி மாற்றி அமைக்கும் என்பது குறித்து பலரும் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்கள். ஏஐ மனிதர்களின் வாழ்க்கைக்கு மிக பெரியளவில் உதவும் என்றும் அது நாம் எப்படி இருக்கிறோம் என்பதையே மாற்றி அமைக்கும் என்கிறார்கள்.

ஏஐ வளர்ச்சி
இதற்கிடையே உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வளரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மிக முக்கியமானது என்றும் அது மக்களுக்கு மிக பெரிய நன்மைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார். அதேநேரம் இப்போது ஏஐ பப்பிள் சூழலுக்குள் (bubble territory) இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு தொழில்துறையையும் மாற்றும் என்றும் இது பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் தொழில்நுட்பப் புரட்சி என்றும் பெசோஸ் கூறினார்.. இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் 2025 மாநாட்டில் ஜெஃப் பெசோஸ் பேசுகையில், "ஏஐ இப்போது பப்பிள் சூழலில் இருக்கிறது. ஆனால், இது பொருளாதாரத்தில் நடக்கும் பப்பிள் அளவுக்கு ஆபத்தானது இல்லை.
பப்பிள் என்றால் என்ன
பொருளாதார பப்பிள் ஏற்பட்டால் வங்கி அமைப்பு நெருக்கடியில் சிக்கி, 2008இல் நிகழ்ந்ததைப் போல மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும்.. அதுபோன்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவே நாம் விரும்புவோம். ஆனால், தொழில்துறை பப்பிள் அவ்வளவு மோசமானவை அல்ல.. ஏனெனில் எல்லாம் முடிந்து தூசி அடங்கிய பிறகு, மிகப் பெரிய நன்மை தான் மக்களுக்குக் கிடைக்கும். இங்கும் அதுவே நிகழப்போகிறது. இது உண்மையானது. செயற்கை நுண்ணறிவால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும்" என்றார்.
ஒரு நிறுவனத்தின் உண்மையான பதிப்பை விட பல மடங்கு அதிகத் தொகைக்கு அதை வாங்குவது அல்லது அதில் முதலீடு செய்வதைத் தான் பப்பிள் (bubble) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது அந்த நிறுவனத்தின் அசல் மதிப்பை விட அதன் வேல்யூவை பல மடங்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். இந்த நிலையற்ற வளர்ச்சியால் ஒரு கட்டத்தில் அந்த துறையே காலியாகிவிடும்.
ஒப்பீடு
2000ல் டாட்-காம் பப்பிள் அப்படி வெடித்தது. அதாவது 1990களின் இறுதியில் ஏகப்பட்ட இணைய நிறுவனங்கள் உருவானது. அவற்றுக்கு உண்மையான மதிப்பை விட மிக அதிக வேல்யூ தரப்பட்டது. இது தாங்க முடியாமல் 2000ல் அந்த சந்தை வெடித்தது. இதனால் ஒட்டுமொத்தமாக இணைய நிறுவனங்களின் மதிப்பு சரிந்தன. பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு குறித்து ஜெஃப் பெசோஸ் இதுபோன்ற கருத்துகளைக் கூறினாலும், வேறு சில வல்லுநர்கள் அதன் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளனர். குறிப்பாக வேலையிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஏஐ வளர்ச்சியால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தொடக்க நிலை வேலைகள் 50% வரை இல்லாமல் போகும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமேடை தெரிவித்துள்ளார். ஏஐ வளர்ச்சி வேலையின்மையை நிச்சயம் அதிகரிக்கும் என்ற அவர், இருப்பினும் உலக நாடுகள் இந்த அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுகின்றன என்றும் அமேடை கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications