ஆப்பு வைக்கும் AI.. முதலில் காலியாகும் வேலைகள் எவை? ஆனா "இந்த" வேலைகளுக்கு பிரச்சனையே இருக்காதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிக பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் ஏஐ தொடர்பாக மிக முக்கியமான ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்படும் 40 வேலைகள் குறித்த லிஸ்ட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. அதேபோல எந்த வேலை அதிகம் பாதிக்கப்படாது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளது. மேலும், ஏஐ வந்தாலும் வேலை போகக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சு இருக்கிறது. ஏஐ நிறுவனங்கள் புதிது புதிதாக வந்து உலகையே ஆட்டிப்படைக்கிறது. அதேநேரம் ஏஐ காரணமாக வேலையிழப்பும் கூட ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஏஐ வேலையிழப்பு மோசமாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Jobs that AI May Replace Fastest vs 40 Safe Roles according to Microsoft Research

ஏஐ ஆய்வு

இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் மாறிவரும் வேலை வாய்ப்புச் சந்தை குறித்து மைக்ரோசாஃப்ட் ஆய்வு நிறுவனம் ஒரு புதிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஏஐ மாடல்களால் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய 40 வேலைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல ஏஐ வந்தாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத 40 வேலைகள் பட்டியலையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

Working with AI: Measuring the Occupational Implications of Generative AI என்ற தலைப்பில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பிங் கோ பைலட்டுடன் நிகழ்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான கன்வர்செஷனை ஆராய்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாம் வேலை செய்யும் சூழலை ஏஐ எப்படி மாற்றி அமைக்கிறது என்பது இதில் விளக்கப்பட்டுள்ளது.

எந்த வேலைகளுக்கு ஆபத்து

மொழி சார்ந்த, கண்டெண்ட் உருவாக்கும், மற்றும் ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப ஒரு வேலையைச் செய்வது உள்ளிட்ட பணிகள் ஏஐ மூலம் எளிதாகப் பாதிக்கப்படும். தகவல் தொடர்பு, எழுதுவது, ஆலோசனை வழங்குவது, டீச்சிங் போன்ற பணிகளும் இதில் அடங்கும். மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள், டேட்டா சயின்ஸ்ட் போன்ற 40 வகையான பணிகள் ஏஐயால் அதிக தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வேலைக்கு ஆபத்து இல்லை

மறுபுறம் உடல் உழைப்பு சார்ந்த பணிகள் ஏஐ மூலம் மிகக் குறைவாகவே பாதிக்கப்படும் என ஆய்வு கூறுகிறது. ரத்தம் சேகரிப்போர், செவிலியர், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உள்ளிட்ட 40 வகையான பணிகள் இதில் குறைவாகவே பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு உடல் உழைப்பு தேவைப்படும். மேலும், நிலைமையைப் பொறுத்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும்> இதனால் இந்த வேலைகளை ஏஐ முழுமையாகச் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வேலையிழப்பு ஏற்படாது

சிலர் ஏஐ மூலம் மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படும் என்று கூறும் நிலையில், மைக்ரோசாஃப்ட் அதற்கு உடன்படவில்லை. பரவலான வேலை இழப்புகள் இருக்காது என்றே மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. மாறாக, ஏஐ கருவிகள் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, ஊழியர்கள் மிகவும் சிக்கலான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தவே உதவும் என்று மைக்ரோசாஃப்ட் கூறுகிறது.

இப்போது எந்தவொரு வேலையும் முழுமையாக ஏஐயால் செய்யப்படுவதில்லை என்றும் மைக்ரோசாஃப்ட் வலியுறுத்துகிறது. மனிதர்களின் முடிவெடுக்கும் திறன், மேற்பார்வை மிக முக்கியமானதாகவே நீடிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+