Meta AI செயலியை பயன்படுத்துறீங்களா? கொஞ்சம் உஷார்! இதை கவனியுங்கள்
வாஷிங்டன்: மெட்டா ஏஐ செயலியை பயன்படுத்துபவர்களின், சாட்கள் இணையத்தில் பொதுவெளியில் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. பல தனிப்பட்ட கேள்விகள் பொதுவெளியில் பகிரப்படுவதால், நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உங்களுடைய ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி (browser history) பொதுவெளியில் இருந்திருக்கிறது. ஆனால், அது உங்களுக்குத் தெரியாது. மெட்டா ஏ.ஐ (Meta AI) செயலியை பயன்படுத்துவோரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. பல பயனர்கள் தங்கள் தனிப்பட்ட சாட் உரையாடல்கள் வெளியாகி வருவதாக புகார் கூறியுள்ளனர்.

ஏ.ஐ-யிடம் (AI) ஒரு கேள்வி கேட்கும்போது, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம், நீங்கள் பதிவிடும் உரையாடலின் முன்னோட்டத்தை (preview) பார்த்துவிட்டு, பின்னர் அதை வெளியிடலாம். ஆனால், சிலர் தங்கள் பகிரும் உரையாடல்கள், ஆடியோ பதிவுகள், படங்கள் போன்றவற்றை உலகிற்குத் தெரியப்படுத்துகிறோம் என்பதை உணராமலேயே பதிவிடுகின்றனர்.
மெட்டா ஏ.ஐ செயலியில் சிலர், வரி ஏய்ப்பு செய்வது எப்படி? பொருளாதார குற்றம் செய்தால், குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்படுவார்களா? சட்ட சிக்கலில் இருக்கும் ஊழியருக்கு நற்சான்று கடிதம் எழுதுவது எப்படி? என்றெல்லாம் கேட்கிறார்கள். அதுவும் அந்த ஊழியரின் முதல் மற்றும் கடைசி பெயர்களுடன் கேட்கிறார்கள்.
ரேச்சல் டோபேக் (Rachel Tobac) என்பவர் இதுபோன்ற சாட்கள் பொதுவெளியில் வருவதை கவனித்திருக்கிறார். மக்களின் வீட்டு முகவரிகள் மற்றும் முக்கியமான நீதிமன்ற விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களையும் அவர் சோஷியல் மீடியாக்களில் கண்டறிந்துள்ளார்.
டெக் க்ரஞ்ச் (TechCrunch) எனும் ஆய்வு நிறுவனம், இதுகுறித்து மெட்டா செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, மெட்டா தரப்பில் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
தனிநபர் தகவல்கள் கசிவு அபாயம்
நீங்கள் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டாலும் அல்லது உங்களுக்கு விசித்திரமான தோல் அலர்ஜி இருந்தாலும், இது ஒரு தனிநபர் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலாகும். பயனர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பும்போது, அது மற்றவர்களும் ஷேராகிறது. நீங்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் மெட்டா ஏ.ஐ-யில் உள்நுழைந்து, உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு பொதுவில் இருந்தால், நீங்கள் தேடும் கேள்விகளும் பொதுவில் தெரியும்.
மக்கள், மெட்டா ஏ.ஐ உடனான உரையாடல்களைப் பார்க்க விரும்புவார்கள் என்ற எண்ணத்தில் இந்தச் செயலியை உருவாக்கி இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. கூகுள் (Google) ஏன் தனது சர்ச் என்ஜினை, சோஷியல் மீடியாவாக மாற்றவில்லை என்று தெரியுமா? கூகுளை போன்ற ஏஓஎல் (AOL) எனும் சர்ச் என்ஜின் நிறுவனம் 2006-ல் பயனர்களின் தேடல்களை வெளியிட்டது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. தனத சர்ச்சை என்ஜினை பேமஸாக அந்நிறுவனம் அப்படி செய்தது. ஆனால், கடைசியில் அது பேக் பயர் ஆகிவிட்டது. மக்கள் அதை முற்றிலுமாக புறக்கணித்தார்கள்.
குறைந்த பதிவிறக்கங்கள், அதிக சர்ச்சை
ஆப்ஃபிகர்ஸ் (Appfigures) என்ற செயலி புள்ளிவிவர நிறுவனத்தின் கூற்றுப்படி, மெட்டா ஏ.ஐ செயலி ஏப்ரல் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 6.5 மில்லியன் முறை மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய செயலிக்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், இது பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நொடியும், மெட்டா ஏ.ஐ செயலியில் கேட்கப்படும் கேள்விகள் வைரலாகி பெரும் சிக்கலை உருவாக்கும் அபாயத்தை நெருங்கி வருகின்றன. ஒரு சில மணி நேரங்களில், அதிகமான பதிவுகள் வெளிவந்துள்ளன. சிலர் தங்கள் ரெசியூமை பகிர்ந்து சைபர் பாதுகாப்பு வேலையை கேட்கிறார்கள். இன்னும் சிலர் வாட்டர் பாட்டில் பாங் (water bottle bong - போதை பொருள் தொடர்புடையது) எப்படி செய்வது என்று கேட்கிறார்கள்.
இவையெல்லாம் தற்போது பொதுவெளியில் ஷேராகி வருவதாக சிக்கல் வெடித்திருக்கிறது.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications