"ஆதார் கார்டு இல்லை சார், தாய்மாமன் தங்க மோதிரம் கொடுங்க!" அமைச்சரிடம் நரிக்குறவ பெண் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆய்வின்போது, 3 மாத கைக்குழந்தையுடன் வந்த நரிக்குறவர் இனப் பெண், தனது குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் கோரிக்கை விடுத்தார்.

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 20-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

narukurava woman

இதையொட்டி, தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் குலசேகரன்பட்டினத்திற்கு வருகை தந்தனர்.

அமைச்சர்கள் கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 3 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரை பின்தொடர்ந்து சென்றார்.

அமைச்சருடன் செல்பி எடுத்த பெண்

அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்த அவர், அமைச்சர் ஆய்வு செய்து கொண்டிருந்த இடத்தில் தனது குழந்தையை அமைச்சரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து, தனது குழந்தைக்கு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆதார் கணக்கு இல்லை

மேலும், தங்களிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், அதனால் தனது குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாசிமாலை கொடுத்த பெண்

இதைக் கேட்ட அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனிடையே, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களே தயாரித்த பாசி மாலையை அமைச்சருக்கு அணிவித்து மகிழ்ந்தனர். அருகில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கும் பாசி மாலை அணிவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

கைக்குழந்தையுடன் வந்த பெண்

கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் கோரிக்கையை அமைச்சர் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கடந்த மாதம் முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.

எங்கு தொடக்கம்?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நகைக் கடைகளிடம் மோதிரம் செய்யும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் மதிப்பிலான மோதிரம், அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்லும் போது கொடுக்கப்படும். 916 ஹால்மார்க் தரத்தில் மோதிரம் இருக்கும்.

ஜூன் 22 ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அது போல் ஆண்டுதோறும் 4.41 லட்சம் குழந்தைகள் பயனடைவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+