மரியாதை தருவதால் எகிறும் செலவு.. ஒவ்வொரு நொடியும் பல கோடி இழக்கும் சாட்ஜிபிடி! அது எப்படி தெரியுமா?
வாஷிங்டன்: இப்போது உலகெங்கும் சாட்ஜிபிடி ஏஐ இணையச் செயல்பாடு தான் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
ஏஐ தான் இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ மாடல்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இது பல்வேறு வழிகளிலும் நமக்கு உதவுகிறது. நமது வாழ்க்கையை ஈஸியானதாக மாற்றுகிறது.

சாட்ஜிபிடி
ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது சாட்ஜிபிடி தான் முன்னணியில் இருக்கிறது. ஏஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் புதுப்புது தொழில்நுட்பங்களை யூசர்களை கவரும் வகையில் இருக்கிறது. இதனால் சாட்ஜிபிடி யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் யூசர்கள் செய்யும் சில வேலைகளால் சாட்ஜிபிடியின் செலவும் கூட எகிறி வருகிறதாம்.
அதாவது சாட்ஜிபிடிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து யூசர்கள் சொல்லும் வார்த்தைகளால் மட்டும் பல மில்லியன் டாலர், அதாவது பல கோடி ரூபாய் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். யூசர்கள் பயன்படுத்தும் ப்ளீஸ் (please) மற்றும் நன்றி (thank you) போன்ற வார்த்தைகள் பேக் எண்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இது செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு செலவு
அதாவது நெட்டிசன் ஒருவர், "ஏஐ மாடல்களில் ப்ளீஸ் மற்றும் நன்றி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவோரால் எவ்வளவு பணத்தை மின்சாரத்திற்குக் கூடுதலாகச் செலவிடுகிறீர்கள்" எனக் கேட்டிருந்தார். அதற்கு சாம் ஆல்ட்மேன், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இதற்கு மட்டும் பல மில்லியன் டாலர்கள் செலவாவதாகக் குறிப்பிட்டார்.

செலவு ஏன்
சாம் ஆல்ட்மேனின் இந்தப் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நம்மில் பலரும் கூட சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மாடல்களை பயன்படுத்தும்போது மரியாதை கொடுப்பதாக நினைத்து ப்ளீஸ் மற்றும் நன்றி உள்ளிட்ட வார்த்தைகளை யூஸ் செய்து இருப்போம். ஆனால், அது கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரிய செலவு வைப்பது தெரிய வந்துள்ளது. சும்மா இரண்டு வார்த்தையால் எப்படி இவ்வளவு செலவாகும் என நீங்கள் கேட்கலாம்.. அதற்கான பதிலையும் நாம் பார்க்கலாம்.
அதாவது பொதுவாக நாம் ஒன்றை டைப் செய்து அனுப்புகிறோம் என்றால் அதை டோக்கனை மாற்றியே சாட்ஜிபிடி பிராசஸ் செய்யும். ஒரு வார்த்தை என்பது 4 ஆங்கில லெட்டர்களை குறிக்கும். அதன்படி please என்ற வார்த்தை 1.5 டோக்கன் எடுத்துக்கொள்ளும். அதேபோல thank you என்பது இரு வார்த்தையாக இருப்பதால் அதற்கு 3 டோக்கன் எடுத்துக்கொள்ளும்.
பல கோடி கூடுதல் செலவு
வழக்கமாக நாம் சாட் செய்யும்போது ப்ளீஸ், தேங் யூ எல்லாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், ஏஐ மாடல்கள் ஒவ்வொரு வார்த்தையையும் பிராசஸ் செய்ய வேண்டும். எனவே, சராசரியாக 100 முறை தேங்க் யூ மற்றும் 100 ப்ளீஸ் வார்த்தைகளை யூஸ் செய்யும்போது 8 Wh முதல் 40 Wh வரை செலவாகும். இது நீங்கள் செல்போனை சார்ஜ் செய்ய ஆகும் மின்சாரத்தை விட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம். இப்படி அனைத்து யூசர்களையும் சேர்த்தால் பல கோடி முறை இந்த இரு வார்த்தைகளை யூஸ் செய்யப்படுவதால் சாட்ஜிபிடிக்கு நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் செலவாகிறது.












Click it and Unblock the Notifications