இந்தியாவின் செலவை அமெரிக்க ஏன் ஏற்கணும்? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் அரசு.. ஓவர் பேச்சு
வாஷிங்டன்: AI துறையில் அமெரிக்கா தான் இப்போது முன்னணியில் இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவில் ஏஐ சேவைகளை வழங்க ஆகும் செலவை ஏன் அமெரிக்கர்கள் ஏற்க வேண்டும் என டிரம்ப் தரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது. இது குறித்து டிரம்பின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இப்போது ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி, க்ரோக் என அமெரிக்க நிறுவனங்களே இப்போது ஏஐ சந்தையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும் கூட வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஏஐ சேவைகள்
இந்தியாவின் ஏஐ சேவைகளை வழங்க ஆகும் செலவை ஏன் அமெரிக்கர்கள் ஏற்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாட்ஜிபிடி போன்ற தளங்கள் அமெரிக்க மண்ணில், அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதாகவும், ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்களுக்கே முக்கியமாகச் சேவைகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'ரியல் அமெரிக்கா வாய்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பேசியபோது நவரோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது தான் வெளிநாடுகளில் உள்ள AI சேவைகளுக்கு அமெரிக்க வளங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அமெரிக்கர்கள் ஏன் ஏற்க வேண்டும்?
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவில் AI சேவைகளைக் கொடுக்க ஆகும் செலவை அமெரிக்கர்கள் ஏன் ஏற்க வேண்டும்? சாட்ஜிபிடி அமெரிக்க மண்ணில் செயல்பட்டு, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கே அதிக அதிக சர்வீஸை கொடுக்கிறது. இதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க விவசாய நிலங்களை வாங்குவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பல சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்காவில் விவசாய நிலங்களின் அசல் விலையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக விலைக்கு நிலங்களை வாங்குகின்றன என்றும், இது அமெரிக்காவில் உணவுப் பணவீக்கத்தை மோசமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியா அமெரிக்கா கருத்து
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது. மேலும், இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே உராய்வு தொடரும் நிலையில், நவரோ இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
சர்ச்சை கருத்து
அதேநேரம் நவரோ இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில், இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் மற்றும் உற்பத்தி கொள்கைகள் குறித்து அவர் பல சர்ச்சை கருத்துகளை கூறியிருக்கிறார். இந்தியா நியாயமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூட கூறியிருந்தார்.
மேலும், உக்ரைனில் ரஷ்யாவின் போரை இந்தியா தூண்டிவிடுவதாகக் கூறிய நவரோ, ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்வதை விமர்சித்தார். உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கைக் குறித்துப் பேசிய அவர், இந்தியாவை ரஷ்யாவின் சலவை நிலையம் என்றும் வரிகளின் மகாராஜா என்றும் விமர்சித்திருந்தார்.. மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்தப் பணம் உக்ரைன் மோதலை மோடியின் போர் என்றும் அழைத்தார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications