15,000 ஊழியர்களை தூக்கிய மைக்ரோசாப்ட்! AI கத்துக்க சொல்லி அட்வைஸ்! என்ன நடக்கிறது டெக் உலகில்?
வாஷிங்டன்: டெக் உலகில் வேலை வாய்ப்புகளை வெட்டி சுருக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் 15,000 பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளது. தற்போது பணியாற்றும் ஊழியர்கள் AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், வேலை ஆட்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு வரை பல கட்டமாக 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்திய தகவல்படி, Xbox பிரிவு மற்றும் உலகளாவிய விற்பனை குழுக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மே மாதத்தில் 6,000 பேரும், ஜூன் மாதத்தில் நூற்றுக்கணக்கான பேரும் வேலையை இழந்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) மைக்ரோசாப்ட்டின் எதிர்கால திட்டங்களில் முக்கிய பங்காக உள்ளது. AI-யை பயன்படுத்துவது விருப்பமாக இல்லாமல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெவலப்பர் பிரிவின் தலைவர் ஜூலியா லியூசன், AI பயன்பாடு ஊழியர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறியுள்ளார். "AI பயன்படுத்துவது இனிமேல் விருப்பம் அல்ல, இது அவசியம்," என அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
AI உள்கட்டமைப்பில் முதலீடு
இந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் AI உள்கட்டமைப்பில் சுமார் $80 பில்லியன் முதலீடு செய்துள்ளது. செலவுகளை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. AI-யை அனைத்து துறைகளிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டியில் முன்னிலை வகிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மைக்ரோசாப்ட் தனது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
விற்பனை முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய விற்பனை பணிகளை குறைத்து, தொழில்நுட்ப அறிவு மற்றும் AI திறமைகள் கொண்ட "சொல்யூஷன்ஸ் இன்ஜினியர்ஸ்" நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை வர்த்தக அதிகாரி ஜட்சன் அல்தாஃப், இது குறித்து கூறுகையில் "ஒவ்வொரு டிவைஸிலும் ஒரு கோ பைலட் இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஊழியர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 'கோபைலட்' (Microsoft Copilot) போன்ற AI கருவிகளை எந்த அளவுக்கு ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க தொடங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களிடம் AI திறமைகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. AI கருவிகளை பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டுக்கான அறிக்கையில் AI பயன்பாட்டின் அளவீடுகள் சேர்க்கப்பட உள்ளன.
மொத்தத்தில், மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தி வருகிறது. வேலை ஆட்களை குறைத்தாலும் மீதமுள்ள ஊழியர்களின் திறமைகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விற்பனை முறைகளை மாற்றி செலவுகளை குறைத்து, AI-யை அனைத்து துறைகளிலும் கொண்டு சேர்க்க மைக்ரோசாப்ட் செயல்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications