20% கட்டணம் கொடுங்க.. டிரம்ப் வைத்த செக்! தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் மீண்டும் அதிகரித்திருப்பதால், சர்வதேச கச்சா எண்ணெய் கடல் வழி போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை முடங்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த பாதையில் கப்பல்கள் பயணிக்க வேண்டும் எனில், எனக்கு 20% கட்டணம் கொடுங்க என்று டிரம்ப் கேட்டிருக்கிறார். இது உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எக்குதப்பாக எகிற வைக்கப்போகிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஈரானின் தலையீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்கும். நாங்கள் ஈரான் மீதான முற்றுகையை மீண்டும் தொடங்க இருக்கிறோம்.

Trump

கட்டணம் கேட்கும் டிரம்ப்

எனவே ஈரான் கப்பல்கள் மற்றும் அந்நாட்டிலிருந்து சரக்குகளை எடுத்து செல்லும் கப்பல்கள் இந்த பாதையில் பயணிக்க முடியாது. மற்றபடி, வேறு நாடுகளின் கப்பல்கள் வழக்கம் போல பயணிக்கலாம். அதற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். ஹார்முஸின் பாதுகாவலன் நாங்கள்தான். ஆனால், இந்த வேலைக்காக நியாயமான தொகையை கொடுக்க வேண்டும். எனவே 20% கட்டணத்தை நாங்கள் வசூலிப்போம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

வெடிக்கும் புது பஞ்சாயத்து

டிரம்ப் சொல்வது எல்லாம் ஓகேதான்.. ஆனால், இந்த 20% கட்டணம்.. கடைசியில் நம்மை போன்ற சாமானிய மக்களின் தலையில்தான் வந்து விழும். அமெரிக்காவின் தேவையில்லாத ஈரான் சண்டை காரணமாக, ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எகிறியிருக்கிறது. இதை சமாளிக்க மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு E20 என்கிற குண்டை தூக்கி போட்டிருக்கிறது.

சரி போர் முடிந்தால்.. பிரச்சனை சரியாகிவிடும்! பெட்ரோல், டீசல் வழக்கம் போல கிடைக்கும் என்று என்று நம்மில் பலரம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்று.. 20% கட்டணம் என்கிற அறிவிப்பு மூலம்.. டிரம்ப் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

டிரம்ப் செய்யும் அநியாயம்

கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் இதற்கு கட்டணமாக, மொத்த சரக்கின் மதிப்பில் 5-15% வரைதான் வசூலிக்கின்றன. ஆனால், டிரம்ப் கேட்பது 20% கட்டணம். அப்படியெனில், இனி மத்திய கிழக்கில் இருந்து வரும் கச்சா எண்ணெய்யின் விலை, இந்த 20% கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்படும்.

அப்புறம் என்ன? நம்மூர் பெட்ரோல் பங்கில், ரேட் எகிறும். பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், பால், எண்ணெய், அரசி என மற்ற அத்தியாவசிய பொருட்களின் ரேட்டும் அதிகரிக்கும். கடைசியாக நாம்தான் பாதிக்கப்படப்போகிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+