ஆப்பு வைத்த கூகுள் ஜெமினி! Nano Banana-ஐ இனி இஷ்டம் போல உருவாக்க முடியாது.. என்ன இப்படி ஆகிடுச்சு
பசென்னை: பொதுமக்களைக் கவர ஏஐ நிறுவனங்கள் பல்வேறு வசதிகளைக் கொண்டு வருகிறது. அப்படி ஜெமினி நிறுவனம் கொண்டு வந்துள்ள நானோ பனானா என்பது இப்போது இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. இதை நாம் எப்படி உருவாக்க வேண்டும்.. இதிலுள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் ஏஐ தான் வேற லெவலில் வளர்ந்து வருகிறது. பல்வேறு ஏஐ நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது வசதிகளைக் கொண்டு வருகிறது. ஜிப்லி ஆர்ட் தொடங்கி பல்வேறு விஷயங்களை உதாரணமாக நாம் சொல்லலாம். அப்படி தான் இப்போது கூகுள் நிறுவனம் தனது ஜெமினி ஏஐ தளத்தில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நானோ பனானா என்றால் என்ன
நானோ பனானா (Gemini Nano Banana) என்ற அம்சம் தான் இப்போது 2025ல் டிரெண்டிங்கில் இருக்கிறது. இது வழக்கமான போட்டோ ஜெனரேஷன் கருவிகளைப் போலல்லாமல், சாதாரண போட்டோக்கையும் கூட யதார்த்தமான 3D மாடல்களாக மாற்றும் சிறப்புத் திறன் கொண்டது. யூசர்கள் ஒரு சிறிய text prompt கொடுத்தால் போதும்.. உயிரோட்டமான போட்டோக்களை தத்ரூபமாக உருவாக்கிக் கொடுக்கும்.
ஜெமினி ஏஐ டூலின் வேகமும் துல்லியமும் தான் அதைத் தனியாகக் காட்டுகிறது. இது பெரும்பாலான மற்ற போட்டி ஏஐ டூல்களை காட்டிலும் மிக வேகமாகச் செயல்படும். மேலும், முக்கியமான மற்றும் அத்தியாவசிய டீடெயில்கள் எதுவும் இழக்காமலும் இருக்கும். இது டிரெண்டாக முக்கிய காரணம் இதுதான்!
ஆப்பு வைத்த ஜெமினி
முதலில் சாட்ஜிபிடியில் ஜிப்லி ஆர்ட் டிரெண்டான போது இதேபோலத் தான் பல கோடி பேர் ஒரே நேரத்தில் அதைப் பயன்படுத்தினர். அப்போது சாட்ஜிபிடி மொத்தமாகவே முடங்கியது. அதுபோல நடக்கக்கூடாது என்பதற்காகவே கூகுள் முதலிலேயே இதற்கு வரம்பை அறிவித்தது. இதற்கு முன் இலவச யூசர்கள் ஒரு நாளைக்கு 100 படங்களும், ப்ரோ (Pro) மற்றும் அல்ட்ரா யூசர்கள் தினசரி 1,000 போட்டோக்களை உருவாக்கலாம் எனத் தினசரி வரம்புகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால் இப்போது பல கோடி பேர் தினசரி இதை யூஸ் செய்வதால் இந்த வரம்புகளை கூகுள் சத்தமில்லாமல் நீக்கியுள்ளது. அதாவது நம்பர்களை தூக்கிவிட்டு, இலவச யூசர்களுக்கு பேசிக் ஆக்சஸ் என்றும் ப்ரோ மற்றும் அல்ட்ரா திட்டங்களுக்கு ஹை ஆக்சஸ் என்றும் குறிப்பிடுகிறது. அதாவது பலரும் இஷ்டத்திற்கு இந்த டிரெண்டை யூஸ் செய்கிறார்கள். இதன் காரணமாக படங்கள் உருவாக்குவதை கட்டுப்படுத்தவே, நம்பரை நீக்கிவிட்டு இதுபோல பொதுவாக குறிப்பிட்டு இருக்கிறது கூகுள். இதன் மூலம் தேவை அதிகம் இருக்கும்போது இலவச யூசர்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
என்ன செய்யலாம்
எனவே நானோ பனானாவை தினசரி நம்பி தொழில் செய்யும் நபராக நீங்கள் இருந்தால் இனி இலவசத் திட்டம் உங்களுக்கு கை கொடுக்காது. அவசர நேரத்தில் லமிட் முடிந்ததாக வந்தால் எதுவும் செய்ய முடியாது. எனவே, தொழில்முறையில் அதைப் பயன்படுத்துவோர் ப்ரோ மற்றும் அல்ட்ரா திட்டங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்து கொள்வது சரியாக இருக்கும்.
நானோ பனானா உருவாக்குவது எப்படி?
- முதலில் ஜெமினி செயலியை ஓபன் செய்து, நானோ பனானா ஆப்ஷனுக்கு செல்லவும்.
- நீங்கள் 3D மாடலாக மாற்ற விரும்பும் ஒரு படத்தைப் பதிவேற்றவும்.
- அந்த போட்டோ எப்படி வர வேண்டும் என்பதை குறிப்பிட்டு prompt செய்யுங்கள்.. (AI-இல் ப்ராம்ப்ட் என்பது நீங்கள் கொடுக்கும் ஒரு இன்புட். அதாவது AI மாடலிலிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட பதிலைப் பெறுவதற்கு நீங்கள் தரும் இன்புட் தான் ப்ராம்ப்ட்.. உதாரணமாக, ஒரு போட்டோவை பதிவிட்டு, அது கடலில் மிதப்பது போலத் தேவை என்றால் அதை விவரித்து ஆங்கிலத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் அதைப் படித்து, அதற்கேற்ற படத்தை ஏஐ உருவாக்கும்.)
- அவ்வளவு தான் க்ரியேட் என்பதை கொடுத்தால் ஜெமனி தனது வேலையைப் பார்க்க ஆரம்பிக்கும்.
- சில வினாடிகளில் ரெண்டர் ஆகி போட்டோ வந்துவிடும்.












Click it and Unblock the Notifications