மனிதர்களே தேவையில்லை! எவ்வளவு செக்யூரிட்டி இருந்தாலும்.. அசால்டாக நுழைந்து தாக்கும் AI போர் விமானம்!
சியாட்டில்: இப்போது ஏஐ இல்லாத துறையே இல்லை என நாம் சொல்லும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே முழுக்க முழுக்க ஆளே இல்லாமல் ஏஐ மூலம் செயல்படும் ஒரு அதிநவீனப் போர் விமானம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் போர் நடக்கும் முறைகளையே மாற்றும் என்று சொல்லப்படுகிறது.
இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஏஐ வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையும் அதற்கு விதிவிலக்கு இல்லை.. எதிர்காலத்தில் போர் முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஷீல்ட் ஏஐ (Shield AI) நிறுவனம் எக்ஸ் பேட் (X-BAT) என்ற அதிநவீனப் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு அதிநவீனப் போர் விமானமாகும்.

ரன்வே தேவையில்லை
இந்த விமானம் புறப்படவும் தரையிறங்கவும் தனியாக ரன்வே தேவையில்லை.. நின்ற இடத்தில் இருந்தபடியே செங்குத்தாகப் புறப்படும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்ட போர் ஜெட் ஆகும். பூமியின் எந்தவொரு பகுதியிலும் கடல்களுக்கு மேல் கூட சிறப்பாகச் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட அல்லது இல்லாத போதும் இது சிறப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இந்தப் போர் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் உயர் ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.. அடுத்த தலைமுறை போர் விமானமாகவே இது கருதப்படுகிறது.
வித்தியாசம் என்ன
மேலும், ஏற்கனவே நாம் பயன்படுத்தப்படும் வழக்கமான டிரோன்களுக்கும் இந்த விமானத்திற்கும் மிக பெரிய வேறுபாடு உள்ளது. தற்போதுள்ள டிரோன்கள் செயல்பட நாம் இன்புட் கொடுக்க வேண்டும். ஆனால், இது செயற்கை நுண்ணறிவு மூலம் தானாகவே செயல்படும். புறப்படுவது, ஒரு ஆபரேஷனை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என அனைத்தையும் இது தானாகவே முடிவு செய்யும்.
ஷீல்ட் ஏஐ சொல்வது என்ன
இது தொடர்பாக ஷீல்ட் ஏஐ இணை நிறுவனரும் முன்னாள் கடற்படை சீல் அதிகாரியுமான பிராண்டன் செங் கூறுகையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதே மிக பெரிய வெற்றி என்பதை நான் நம்புகிறேன். மோதலை அதிகரிப்பதை விட, அறிவார்ந்த அமைப்புகள் மூலம் மோதல்களைத் தடுப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பல துறைகளில் பயன்படுத்த முடியும். இது நிச்சயம் புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும்" என்றார்.
இந்தப் போர் விமானத்திற்கு ஓடுபாதைகள் தேவையில்லை. இது ஓடுபாதை இல்லாமல் நின்ற இடத்தில் இருந்து புறப்படும், தரையிறங்கும்.. இதன் மூலம், காடு, பனிக்கட்டிகள், முறையான தளம் இல்லாத இடம் என எந்தவொரு இடத்திலும் தரையிறங்கவும் மேலே எழும்பவும் முடியும்" என்றார்.
மூளையே இதுதான்
ஹைவ்மைண்ட் என்ற ஏஐ சாப்ட்வேர் தான் இந்தத் தானியங்கி போர் விமானத்தைத் தனித்துக் காட்டுகிறது. இதைப் போர் விமானத்தின் மூளை என்று கூட சொல்லலாம். தகவல் தொடர்பு இல்லாத இடங்களில் மனித இன்புட் இல்லாமல் எப்படிச் செயல்படலாம் என்ற முடிவுகளை ஹைவ்மைண்ட் எடுக்கிறது. அதாவது வழக்கமான டிரோன்களுக்கு இன்புட் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் நிச்சயம் தேவை. ஆனால், எஸ் பேட் இந்த இரண்டும் இல்லாத சூழல்களிலும் கூட சிறப்பாகச் செயல்படும். மனித மேற்பார்வை இல்லாமல் தனியாகச் செயல்படும்.
முக்கிய பாயிண்டுகள்
- ஹைவ்மேண்ட் தொழில்நுட்பம் மூலம் விமானம் யாருடைய துணையும் இல்லாமல் இயங்கும்.. சிக்கலான மிஷன்களில் பைல் இருக்கும்போது அவர்களுக்கும் தேவையான டேட்டாவை கொடுத்து உதவும்.
- தொடர்ச்சியான மனித கண்காணிப்பு இல்லாமல் கூட சுயமாகச் செயல்படும் திறமை கொண்டது.
- ரியல் டைம் டேட்டாவை வைத்தும் மாறிவரும் போர்ச் சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு முடிவெடுக்கும்.
- இதில் இருக்கும் ஏஐ கிட்டத்தட்ட மனித மூளை போலச் செயல்படும் என்பதால் ஜிபிஎஸ் இல்லாத சமயங்களிலும் கூட இது துல்லியமாக இயங்கும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications