2023ஆம் ஆண்டில் வெற்றிக்கனியை ருசிக்கப்போவது யார் தெரியுமா? எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை: சென்னை: 2023ஆம் ஆண்டு பலருக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. பலருடைய வாழ்க்கையில் அதிசய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 5,6,7,8,9 ஆகிய எண்களில் பிறந்தவர்களும், இந்த எண்களை கூட்டுத்தொகையாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்களுக்கு இந்த 2023ஆம் ஆண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 2023ஆம் புத்தாண்டில் வெற்றிக்கனியை ருசிக்கப்போவது யார் என்று துல்லியமாக கணித்து நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக வழங்கியுள்ளார் எண்கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.
கடந்த 3 ஆண்டுகாலமாகவே மக்களில் பலருக்கும் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல் என பலரது வாழ்க்கையிலும் கசப்பான பக்கங்களை கொடுத்து விட்டது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு. 2022ஆம் ஆண்டில் பொருளாதார சிக்கல்களில் இருந்து சற்றே மீண்டு வந்தாலும் பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். வெற்றிகள் தேடி வரும் என்று எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்துள்ளார். யாருக்கெல்லாம் 2023ஆண்டு வசந்தத்தை தரப்போகிறது?யாரெல்லாம் வம்புக்கு போகாமல் வாயை முடி மவுனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் E H N X என்ற முதல் எழுத்தை தனது பெயராகக் கொண்டவர்களும் தனது தனி திறமையால் பிறரை அடக்கி விடுவார்கள். காஸ்மிக் எனர்ஜியை தனது தலைமுதல் கால் வரை கொண்டவர்கள் இவர்களே. பண பலம் கொண்ட பலரை தனது அறிவை செலுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இவர்களே..வசீகரன் என்ற பெயருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் இவர்களே.. மட்டமான மண்ணைக் கூட திட்டமிட்டு பொன்னாக்கும் புத்திசாலிகள் இவர்கள்தான். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு பல திண்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் இனி இனிப்பான விசயங்களாகவே நடைபெறும். வீடு நிலம் வாங்குவீர்கள். கமிஷன், விவசாயம்,ரியல் எஸ்டேட், கலைத்துறை ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை பெரும் ஏற்றத்தை தந்து மகிழ்வு தரும் வகையில் அமையும் இந்த 2023ஆம் ஆண்டு.
6,15,24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், U,V, W ஆகிய முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களுக்கும் இந்த உலகத்தில் உள்ள சுகங்கள் எல்லாம் தானாக ஓடி வரும். தன்னகத்தை சுருட்டி அவ்வளவு சுகங்களையும் வைத்துக்கொண்டவர்கள் இவர்கள்தான். மக்களை மகிழ்வித்து மகிழ்பவர்கள் இந்த 6ஆம் எண்காரர்களே. திரைத்துறை, தொலைக்காட்சித்துறை, கலைத்துறையில் இவர்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கும். பெண்களை அதிகமாக ரசிக்கக் கூடிய ரசிகமணிகள் இவர்கள்தான். ஆடாம்பரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஆறாம் எண் காரர்கள் சென்ற ஆண்டு நினைத்ததை எல்லாம் நிரந்தரமாக்கி மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த 2023ஆம் ஆண்டு அமைதி, அதிரடி என மாற்றி மாற்றி வாழ்க்கை பயணம் அமையும். கவனத்துடன் செயல்பட்டு வருமானத்தை பல மடங்காக்கிக் கொள்ளலாம். சினிமா, கமிஷன், பத்திரிக்கை என பெண்களைக் கவரும் துறைகளில் வேலை செய்பவர்கள் கடிகாரத்தின் சின்ன முள் பயணம் செய்வது போல மெதுவாக பயணிப்பதே நல்லது.
7,16,25 தேதிகளில் பிறந்தவர்களும் O,Z ஆகிய முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களும் எப்பொழுதுமே கடவுளின் குழந்தையாகவே போற்றப்படுவார்கள். சிறப்பான நடவடிக்கை பிறரை கவர்ந்திழுக்கும் வசீகரம், அமைதியான பேச்சு குழப்பமான நிலை, ஆன்மீக மனநிலை அனைவரையும் கவர்ந்திழுக்கும் உலக நாயகர்களே இவர்கள்தான். அனைவராலும் விரும்பப் படுபவர்களும் இவர்களே. ESP என்ற பவர் கொண்ட இவர்களின் ஆலோசனைக்காக பலர் காத்திருப்பார்கள். 2023ஆம் ஆண்டின் கூட்டு எண் 7 இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
நினைத்து நின்று போன காரியங்கள் எல்லாம் மடைதிறந்த வெள்ளம் போல ஒவ்வொன்றாக நிறைவேறுவதைப்பார்த்து மகிழ்ச்சியில் தத்தளிக்கப்போகிறீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, உணவு, கமிஷன், பிரிண்டிங், திரைத்துறை, விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் எல்லாம் அதிரடியான வெற்றிகளைக் குவிக்கப்போகிறீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்லதே நடக்கப்போகிறது.
8,17,26 தேதிகளில் பிறந்தவர்களும், P,F என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களும் கூடுமானவரை தனித்துவமாகவே வாழ்வார்கள். பிறருக்கு ஆலோசனை சொல்லும் இவர்களுக்கு ஆலோசனை கூற யாரும் வருவதில்லை. திட்டம் தீட்டுவதில் மிகவும் திறமையானவர்கள் இவர்கள்தான். ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள் தனது தகுதிக்கு மீறி ஆசைகள் இருந்தாலும் அதை தனதாக்கி காட்டி வெற்றி பெற்று காட்டும் திறமைசாலிகளும் இவர்களே. 2023ஆம் ஆண்டு இவர்களுக்கு மகிழ்வான பல நிலைகளைத் தரப்போகிறது. குடும்ப அமைதிக்கு நன்றாக இருக்கும். ஆன்மீக பயணங்கள், இயற்கை இடங்களுக்கும் செல்லலாம். இரும்பு, ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன், வாகன உற்பத்தி, எலக்ட்ரிகல்ஸ், சினிமா, எண்ணெய் போன்ற துறைகளில் வெகுவான லாபம் கிடைக்கும். இந்த அற்புதமான எட்டாம் எண்காரர்களுக்கு.
9,18,27 தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண்ணில் 9ஐ கொண்டவர்களும், நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நடை,பிறரை தன் பக்கம் சாய்த்திடும் மிடுக்கான முகம் அடுத்தவர்களை அடக்கிவிடும் பேச்சு இவர்களுக்கு பெரிய ஆயுதமாக இருக்கும். தன் மனதிற்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை சபைக்கு கொண்டு வருவதில் வல்லவர்கள் இவர்கள். மனோ திடத்தின் மன்னர்கள் இவர்கள்தான். உடலும் உள்ளமும் பேச்சும் எப்பொழுதும் உஷ்ணமாகவே இருக்கும். மிகப்பெரிய ராஜதந்திரம் மிக்கவர்கள் இவர்கள். இவர்களிடம் மோதி ஜெயிப்பவர்கள் மிகவும் குறைவுதான். இவர்களின் தோற்றமே எதிரிகளை ஏமாற்றி திருப்பி ஓடச்செய்து விடும். 01-01-2023 கூட்டுத்தொகை 9 வருவதால் இந்த 9ஆம் எண்ணில் பிறந்தவர்கள் போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறும். திட்டம் போட்டு செயல்படாமல் இருந்த பல வேலைகள் வெற்றி பெற்று தீரும் எனலாம். ரியல் எஸ்டேட், ஹார்டுவேர் கலைத்துறை, சினிமாத்துறை, இரும்பு, விவசாயம், உணவகம், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் வைத்திருப்பவர்கள் இந்த துறையினர் எல்லாம் நிச்சயமான முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான கால கட்டமாக அமைந்து விடும்.












Click it and Unblock the Notifications