2025 தை மாதம் ராசி பலன்: மேஷ ராசிக்கு சிவ ராஜ யோகம்.. என்ன பலன்கள் கிடைக்கப் போகுது தெரியுமா?
சென்னை: 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அதனால் பலர் தை மாதம் வரை காத்திருந்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இந்தப் பதிவில் மேஷ ராசிக்கு தை மாதம் ராசி பலன்களை காணலாம்... (Mehsam thai month rasi palan)
மேஷம் ராசிக்கு தை மாதம் அற்புதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரிய பகவான் பூர்வ புண்ணிய பலன்களை கொடுப்பார். அவர் தற்போது பத்தாம் இடமான மகரத்தில் வீற்றிருக்கிறார். சூரியனுக்கு மகரம் பகை வீடு தான். கும்பத்தில் சனி பகவான் இருப்பதால், சூரியன் ஸ்தான பலம் என்கிற நிலையில் உள்ளார். அதனால் தை மாதம் மிகவும் நிறைவாக இருக்கும்.

உங்களின் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் உங்களின் செயல்களுக்கு பாராட்டுகள் அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து உயரும். அதிகாரத்தில் இருப்போர் இன்னும் பலமடைவார்கள். தனலாபம் சிறப்பாக இருக்கும். சுய தொழில் செய்வோர் பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள். பணியிடத்தில் உத்யோகஸ்தர்களின் செல்வாக்கு உயரும். பெரிதாக எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. (Thai madha rasi palan for mesham)
ராணுவம், காவல்துறை, மருத்துவம் உள்ளிட்ட அரசுத்துறையில் சிறப்பான உயர்வுகளை காண்பார்கள். இது சார்ந்த பயிற்சியில் உள்ளவர்களுக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் அமர்வதால் முயற்சிகள் வெற்றிகரமாக மாறும். உதவிகள் தேடி வரும். குடும்ப தகராறுகள் நீங்கும். நீண்டகால மனகசப்புகள் கூட நீங்கும். தந்தை - மகன் உறவு வலுவடையும்.
செவ்வாய் சூரியனை பார்க்கும்போது கல்வி, வேலை ஆகியவற்றில் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான ஏற்றங்களை காண்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் நல்லபடியாக அமையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. தொழில் விருத்தி செய்வதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. சுக்கிரன் உச்சம் பெற்று 12ஆம் இடத்தில் மறைகிறார். இதனால் குரு - சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பு இந்த மாதம் உள்ளது.
2 மற்றும் 12 ஆம் இடங்கள் பரிவர்த்தனை பெறும்போது தேவைக்கு ஏற்ற சுப விரயங்கள் இருக்கும். சுப செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருந்து சூரியனை பார்க்கிறார். இதனால் சிவராஜ யோகம் கிடைக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்றம் வரும். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். குடும்பம், பணியிடத்தில் சச்சரவுகள் குறையும்.
குழந்தைகள் மூலம் உதவிகள் கிடைத்து மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 11 ஆம் இடத்தில் சனி சொந்த வீட்டில் ஆட்சி பெறுகிறார். 11 ஆம் இடத்து சனி எப்போதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. வெளிநாட்டு, வெளி மாநில பயணங்கள் மூலம் ஏற்றம் கிடைக்கும். அரசு உதவிகள் உள்ளிட்டவை எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
பெரும்பாலும் தை மாதம் உங்களுக்கு நன்மைகள் தான் அதிகம் நடைபெறும். ஒருவேளை மனம் சங்கடமாக இருக்கிறது என்றால் சனீஸ்வரன் உங்கள் ராசியை பார்ப்பதால் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்லலாம். சிவன் - பார்வதி வழிபாடு செய்து வருவதன் மூலம் மனநலம் சீரடைந்து தன்னம்பிக்கையும், தெளிவும் பிறக்கும்.












Click it and Unblock the Notifications