2025 தை மாத ராசி பலன்: சிம்மத்துக்கு அடிச்சது ஜாக்பாட்.. திடீர் அதிர்ஷ்டத்தால் துள்ளிகுதிக்க போறீங்க
தை மாத ராசி பலன்: சிம்ம ராசியின் ஆறாம் இடத்தில் சூரியன் இருப்பதால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் இந்த தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)
சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை தை மாதத்தில் ராசி நாதன் ஆறாம் வீட்டில் வீற்றிருக்கிறார். ஆறாம் இடத்தில் சூரியன் இருப்பது மிகப்பெரிய சிறப்பைக் கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆறாம் இடத்தில் அசுப கிரகங்கள் இருப்பது யோகத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதனாக இருந்தாலும் சூரிய பகவான் ஆறாம் இடத்தில் இருப்பது என்பது காலபூஷனுக்கு 10 ஆம் இடமாக இருப்பதாலும், காலபூஷனக்கு 4 ஆம் இடத்தை பார்ப்பதாலும் 4, 10 க்குரிய இரண்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு கைகூடி வரும்.

ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய சூரியன் எதிரிகளை வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை அமையும். கடன்களை கட்டி முடிப்பீர்கள்.போட்டிகள், ஒப்பந்தங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை இருந்து வந்ததை விட அதிக தைரியத்தோடு போராடி வெற்றி பெறுவீர்கள். தேர்வு எழுதும் மாணவர்கள், விளையாட்டுத் துறையில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.
துரதிர்ஷ்டமான அசுரர்களை அளிப்பதற்குண்டான சக்தியைப் பெறுவீர்கள். நிறைய பேர் கடன்களை கட்டி முடிப்பீர்கள். அல்லது கடனை வாங்கி புதிய தொழிலை தொடங்குவீர்கள். ஆறாம் இடம் என்பது ஒரு மனிதனுடைய உழைப்பு. கடினமான உழைப்பைக் கொட்டி அதற்கான பலனை அனுபவிக்க கூடிய காலமாக இருக்கும். இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
தொழில் ரீதியான வளர்ச்சியைக் காண்பதற்கும், வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. சூரியன் உச்சம் பெறுகின்ற வீட்டுக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடி வரும். அரசாங்கம், அந்நியர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நல்ல மதிப்பையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள்.
இரண்டாம் இடத்தில் கேது இருப்பதால் படிப்பு, தொழில், வேலைக்குச் சென்று சிரமப்பட்டவர்கள் எல்லாம் இந்த தை மாதத்தில் பட்ட கஷ்டங்களில் இருந்தெல்லாம் விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் ராசியில் ஏழாம் இடத்தை சனி பார்ப்பதால் சிலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கும். இந்த அனைத்து விதமான பிரச்னைகளும் தீரும்.
சூரியன் பத்தாம் வீட்டில் அமருவதால் உடல்நலனில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். சூரிய பகவான் சனீஸ்வரனை நோக்கிச் செல்ல செல்ல எதிர்மறையான சிந்தனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். 8 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் உச்ச பலம் பெற்றிருப்பதால் தொழிலில் மேம்பாட்டைக் கண்டறிவீர்கள். நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். பதவி உயர்வுபெற்று நல்ல இடத்தில் அமர்வீர்கள்.
பெயர், புகழ், விருது பெறுவதற்கான யோகங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம், இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். சூரியன் 6ஆம் இடத்தில் இருப்பதும், சூரியனை செவ்வாய் பார்ப்பதும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும்.
பங்குச் சந்தை, தொழில் சார்ந்திருப்பவர்களுக்கு, பணம் வைத்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு எதிர்பாராத பலன்கள் உண்டாகும் வாய்ப்புண்டு. கேது இரண்டாம் இடத்தில் இருந்தாலும் குரு கேதுவை பார்ப்பதால், கோடி பாவங்கள் நிவர்த்தியாகும் என்பதால் பொருளாதார அபிவிருத்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம், ஆரோக்கியம், ஆயுள் விருக்தி, நல்ல பணவரவு, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, மனநிறைவு உள்ளிட்ட அனைத்து பலன்களையும் கொடுக்கும். அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். விசாகம், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications