Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 தை மாத ராசிபலன்: சுக்கிரனின் ஆட்டம் ஆரம்பம்.. துலாம் ராசிக்கு கொட்டப் போகுது அதிர்ஷ்டம்?

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன்: துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் உச்சத்தில் இருப்பதால் பலவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். துலாம் ராசிக்காரர்கள் இந்த தை மாதத்தில் பெறப் போகும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (Thai month rasi palan)

துலாம் ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் உங்கள் ராசிநாதன் உச்சம் பெற்றிருக்கிறார். உச்சத்தில் சுக்கிரன் அமர்வது என்பது மிகப்பெரிய சிறப்பை உண்டாக்கும். இதுவரை தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். தொடர் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆறாம் இடத்தில் சுக்கிரன் அமர்வதால் எப்படி உழைக்க வேண்டும். யாரிடம் எதை பேச வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும். எதை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்பது குறித்த ஆற்றல், அனுபவம் கிடைக்கும். (Thai month rasi palan for thulam)

thai month rasi palan

குறிப்பாக, ஆண் பிள்ளைகளுக்கு தை மாதத்தில் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். நீங்கள் எடுத்திருக்கக் கூடிய காரியங்களில் அக்கறையோடும், அனுபவத்தோடும் செய்யும்போது சாணக்கிய அனுகூலங்கள் உண்டாகும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விபத்துகளில் இருந்து தப்பிப்பீர்கள். நிறைய கெட்ட விஷயங்களில் இருந்து தப்பிக்கும் நிலை ஏற்படும்.

ஆண்கள், பெண்கள் உறவுகளில் நிறைய மகிழ்ச்சியும், ஒற்றுமையும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெறுப்பு, விரோதத்தை வளர்த்து கொண்டிருப்பவர்கள் கூட இந்த தை மாதத்தில் சந்தோஷமாக கொண்டாடி மகிழும் மாதமாக இருக்கும். ராசிநாதன் உச்சத்தில் இருக்கிறார். உச்சத்திற்கு சம்பந்தப்பட்ட வியாழ பகவான் ரிஷபத்தில் வீற்றிருக்கிறார்.

வியாழனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிற காரணத்தால் இந்த தை மாதத்தில் துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை நடக்கக்கூடியவர்களால் நற்பலன்கள கிடைக்கும். வியாழ திசை நடப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவது பணம், தர்மம், நியாயம், நீதி, அறிவு, திறமை, ஆற்றல், உழைப்பு, அனுபவம், சந்தோஷம், வெற்றி, குதூகலம், கொண்டாட்டம் என அனைத்து விஷயங்களிலும் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து செல்வச் செழிப்பான முன்னேற்றப் பாதைகளை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

துலாமின் நான்காம் இடத்தில் சூரியனும், புதனும் அமர்ந்திருப்பதால் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உயர்கல்வி நோக்கி பயணம் செய்பவர்கள் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும். எநத் இடத்திற்கு போக வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்ற குழப்பங்கள் அனைத்தும் நீங்கி உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உறுதியான ஓர் முடிவை எடுத்த உங்கள் பயணத்தை தொடங்குவீர்கள்.

ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருந்து வந்த எதிர்மறையான போக்குகள் நீங்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இருந்து வந்த மறைமுகமாக எதிர்மறைப் போக்குகள் நீங்கி நீங்கள் விரும்பிய வாழ்க்கை அமையும். மகரத்தில் சூரியன் அமர்வதால் பெரிய லாபங்கள் உண்டாகும். லாட்டரி, வாகனம், புதையல் யோகம் உண்டு.

கார் வாங்குவது, நகை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். செல்வம், ஆரோக்கியம் விஷயங்களில் நல்ல வாய்ப்புகளை வழங்கும். 5 ஆம் இடத்தில் சனி பகவான் வீற்றிருக்கிறார். பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் நல்வாழ்க்கை கிடைக்கும். பூர்வீகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய வருமானங்கள், சொத்துகளைப் பிரித்துக் கொண்டு நிம்மதி பெறுவீர்கள். வழக்குகளில் முடிவுகள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

12 ஆம் இடத்தில் கேது பகவான் வீற்றிருப்பதால் அயன, சயன, புகழ், போக பாக்கியத்தை உண்டாக்கும். குரு பகவான் பார்வையில் வீற்றிருப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகள், சண்டைகள் விலக்கிக் கொள்வது, பிரிந்தவர்கள் சேர்வது போன்ற விஷயங்கள் நடக்கும். 6 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் எதிரிகளை வென்று காட்டுவீர்கள். கடன்களை கட்டி முடிப்பீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் சிறப்பம்சங்களைத் தரும். அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+