Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 சுக்கிரன் பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான பலன்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சுமார் 120 நாட்களுக்கு சுக்கிரன் உச்சமடைய போகிறார். இது 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் பலன்கள் கொட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொகுப்பில் மேஷம், ரிஷபம், மினதும ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி குறித்து பார்க்க போகிறோம்.

பணப்புழக்கம், பொருளாதாரம், காதல், உறவுகள், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு சுக்கிரன் தான் அதிபதி. சுக்கிரன் அமைப்பு நன்றாக இருந்தால் ஒரு மனிதன் சுக போகமான வாழ்க்கையை வாழ முடியும். பொதுவாக சுக்கிரன் 45 நாட்களுக்கு உச்சமடைவார். இந்தமுறை ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைந்து சூரியனுடன் பரிவர்த்தனை செய்கிறார். மே மாதம் இறுதி வரை சுக்கிரன் உச்சத்தில் இருப்பார்.

sukiran peyarchi

சுக்கிரன் என்றாலே பாசிட்டிவ் கிரகம் தான். உச்சத்துக்கு ஒரு யோகம், பரிவர்த்தனைக்கு ஒரு யோகம், மாளவ்யா யோகம், புதனுடன் இணையும் போது மதனகோபால் யோகம், லட்சுமி நாராயண யோகம் என்று ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு யோகம் கிடைக்கும். ராகுவுடன் எந்த கிரகம் சேர்ந்தாலும் அது பெரியளவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது. ஆனால் உச்சமடைந்த சுக்கிரன் ராகுவுடன் சேரும்போது ஒரு யோகம் கிடைக்கும்.

ராகு யோக காரகன், சுக்கிரன் அதிர்ஷ்ட காரகன். அதனால் அந்த இரண்டு கிரகங்கள் இணைவது திருப்பு முனையாக இருக்கும். செவ்வாயை தவிர மற்ற எல்லா கிரகங்களுடனும் சுக்கிரன் சேர்க்கை இருக்கும். சுக்கிரனால் செலவு ஏற்பட்டால் கூட அது மகிழ்ச்சியான சுப செலவாக தான் இருக்கும். ஜூன் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துவிடுவார்.

மேஷம் (Sukiran peyarchi for mesham): சுக்கிரன் உச்சமடையும்போது மேஷம் ராசிக்கு 12வது இடத்தில் இருக்கும். 12வது இடம் என்றால் சுப செலவு, பயணம் ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக திட்டமிட்ட சுற்றுலா, மகன் அல்லது மகளின் உயர் கல்வி ஆகியவை கைக்கூடும். வீடு, நகை, வாகனம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதற்கான சூழல் உருவாகும். சேமிப்பு கரைகிறதே என்று கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் நல்ல காரியங்களை செய்யுங்கள்.

குரு, சுக்கிரன் பரிவர்த்தனையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது சரியான காலமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சியான பொங்கும். இருப்பினும் கணவன் - மனைவி, காதல் உறவில் விவாதங்கள், மாறுபட்ட கருத்துகள் வந்து செல்லும். அதனால் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

ரிஷபம் (Sukiran peyarchi for Rishabam): 2025 ஆம் ஆண்டில் அதிக பலன்கள் ரிஷபம் ராசிக்கு தான் கிடைக்கப் போகிறது. ரிஷபத்துக்கு அதிபதியும் சுக்கிரன் தான். சுக்கிரன் உச்சமடையும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்களின் உங்களின் 11வது வீட்டில் இருப்பார். 11வது இடம் என்பது லாபஸ்தானம். அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. ஏதாவது ஒரு பெரிய அதிர்ஷ்டமாவது நிச்சயம் கிடைக்கும்.

கணவன் - மனைவி, காதல் உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட் காற்று உங்கள் பக்கம் வீசும். லாட்டரியில் ஜாக்பாட் அடிக்கும். வாகனங்களை மாற்றுவதற்கு இது சரியான காலம். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாய்ப்பு தேடி வரும். பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். சுக்கிரனுடன் அனைத்து கிரகங்களின் சேர்க்கையும் சிறப்பாக இருக்கும்.

காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் கைக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருந்து கொண்டே இருக்கும். சொத்து சேர்ப்பீர்கள். பரிசுகள் தேடி வரும். தொழில் நன்றாக இருக்கும். கலைத்துறை, விளையாட்டுத்துறையினருக்கு பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம் (Sukiran peyarchi for Midhunam): மிதுனம் ராசியின் 10வது இடத்தில் சுக்கிரன் உச்சமடைகிறார். 10வது இடம் என்பது தொழிலுக்கு அதிபதி. உங்கள் பெயருக்கு புகழ் சேர்வதற்கான நேரம் இது. உங்கள் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். சுக்கிரன் குருவுடன் பரிவர்த்தனை செய்யும்போது வெளிநாட்டு பயணங்கள் கைக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும்.

வீடு, வாகனம் மாற்றங்கள் திட்டமிட்ட படி நிறைவேறும். மாளவ்யா யோகத்தால் திருமணம் வாய்ப்பு அமையும். சினிமா துறையில் பிரமாண்டமான வெற்றி, புகழ் கிடைக்கும். உங்களுக்கான பாராட்டு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத பலன்களும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+