Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி Vs அண்ணாமலை Vs விஜய்.. 2026 தேர்தலில் வெல்ல போவது யார் ஜாதகம் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். 4 முனை போட்டியால் தேர்தல் களம் பரபரக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசியலின் எதிர்காலம் என கருதப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் ஆகியோருக்கு இந்த தேர்தல் எப்படி இருக்க போகிறது என்பதை அவர்களின் ஜாதக அடிப்படையிலான ஜோதிட அலசல் கட்டுரையில் காணலாம்.

துணை முதலமைச்சர் உதயநிதி மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. உதயநிதி ரிஷபம் ராசி. அவர் தாத்தாவின் ஆஸ்தான ராசியை கொண்டவர். அவருக்கு 11 ஆம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்க போகிறார். அதனால் சின்ன சின்ன பிரச்சனைகள், நெருக்கடிகள், விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மார்ச்6 ஆம் தேதிக்கு பிறகு உதயநிதிக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து நீங்கும். திமுகவுக்காக அதிக உழைப்பை உதயநிதி செலுத்த வேண்டியிருக்கும் [2026 Assembly Election].

2026-assembly-election-election-will-be-lift-for-vijay-annamalai-udhayanidhi-here-is-astrology-re

உதயநிதிக்கு பெரிய பதவி

ஆனால் சனி பகவான் அவரின் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார் என்பதால் மிகப்பெரிய யோகத்தை பெருவார். சனி பகவான் நேரடியாக அவரின் ராசியை பார்ப்பதால் அவரின் கர்ம வினை பலன்களை பெறலாம். அதனால் எங்கு நின்றாலும் பெரிய வெற்றியை பெறுவார். எம்எல்ஏவாக இருந்து துணை முதலமைச்சர் நிலைக்கு சென்றதை போல அடுத்த ஆட்சியில் அவர் பெரிய பதவிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கலாம். தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் அவர் எழுச்சி பெற வாய்ப்புள்ளது. பிரம்மாண்ட வளர்ச்சியடைவார். எல்லோரும் கவனிக்கும் தலைவராக அண்ணாமலை இருப்பார். காரணம் அவரின் ராசிக்கு 9 வது இடத்தில் சனி பகவான் செல்ல போகிறார். சனி 9 ஆம் இடத்திற்கு செல்லும்போது, அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் கிடைக்கும்.

அண்ணாமலைக்கு ப்ரோமோஷன்

அண்ணாமலைக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது. இந்த தேர்தலில் அவரின் பங்களிப்பு பெரியளவு இருக்கும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழையவும் வாய்ப்புள்ளது. அப்படி சென்றால் ஆளுங்கட்சிக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுப்பார். மக்கள் செல்வாக்கு, நீதி, தைரியம் ஆகியவற்றுக்கு சனி தான் அதிபதி. அது நல்ல நிலையில் இருப்பதால் மார்ச் 6 ஆம் தேதிக்கு பிறகு அண்ணாமலை மிகப்பெரிய வெற்றியடைவார்.

தவெக தலைவர் விஜய் கடகம் ராசியைச் சேர்ந்தவர். அண்ணாமலையும் கடக ராசி தான். அண்ணாமலையை போல விஜயும் சமீப காலமாக அதிக நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். கரூர் கூட்ட நெரிசல், ஜனநாயகன் படம் தடை என்று எதிர்மறையான பலன்களை அனுபவித்து வருகிறார். வருகிற சனி பெயர்ச்சி விஜய்க்கு திருப்பு முனையாக இருக்கும். சனி பகவான் முடிவு செய்துவிட்டால் எந்த மனிதரையும் தூக்கிவிடும்.

விஜய்க்கு திருப்புமுனை

விஜயின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அவரின் செயல்பாட்டில் நிறைய மாற்றம் ஏற்படும். சனி பகவான் பாக்கிய ஸ்தானம் செல்வதால் விஜய் மிகப்பெரிய யோக பலன்களை பெறுவார். வெற்றி தோல்வியை கடந்து பல பெரிய தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+