2026 Assembly Election: தேர்தல் எப்படி இருக்கும்.. எந்த கட்சி வெற்றி பெறும்.. ஜோதிடம் சொல்வது என்ன
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக முயற்சி செய்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார், ஜோதிட ரீதியாக கிரக நிலைகள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மார்ச் 6 ஆம் தேதி தான் திருப்புமுனை. அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பும் அதன் பிறகு தான் இருக்கும். அரசியல் கட்சிகளின் நகர்வுகளின் கிரக நிலைகளின் தாக்கம் இருக்கும். தமிழ்நாட்டு வரலாற்றில் சந்திக்காத தேர்தலாக இது இருக்கும். யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது [Assemebly election].

திமுகவுக்கு யோகம்
எதிரிகள் பிரிந்திருந்து பலம் இழப்பது திமுகவுக்கு சாதகம். ஸ்டாலின் + உதயநிதி 2 ஜாதகங்களும் சேர்வது திமுகவுக்கு அசுர பலத்தை கொடுக்கும். கருணாநிதியை விட உதயநிதி ஜாதகம் பவர்புல்லானது. அதனால் அவரின் எழுச்சி திமுகவுக்கு பெரிய பலத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. திமுக 160 தொகுதிகளுக்கு மேல் நிற்கும். காங்கிரஸ் அவர்களின் கூட்டணியில் இருந்து பிரிய வாய்ப்பில்லை. அந்தக் கட்சிக்கு 25 - 30 தொகுதிகள் கொடுக்க வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணி அப்படியே தொடர்வதுடன் புதிய கட்சிகள் அவர்களுடன் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. ராமதாஸ் ஆதரவும் திமுகவிற்கு இருக்க வாய்ப்புள்ளது. எதிரிகள் பலமிழப்பதுடன், கூட்டணி பலம், தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவை காரணமாக வருகிற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அடுத்த ஆட்சியில் மத்தியிலேயே உதயநிதி பெரிய பொறுப்பேற்கும் நிலையும் உள்ளது.
அதிமுக நெருக்கடி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பாஜக ஆகிய 2 கட்சிகள் தான் பவர்புல்லானவை. மற்ற கட்சிகளை அவ்வளவு வலுவாக எடுக்க முடியாது. இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா.. சாவா போன்றது. எடப்பாடியின் ஜாதகம் தான் முக்கியமானது. அவர் தவறான முடிவு எடுத்தால் விபரீதமாகிவிடும். கூட்டணி கட்சிகளை அவர் அரவணைத்து செல்லாவிடின் சிக்கல் ஏற்படும்.
யாரையும் அரவணைக்காமல் இருப்பதுதான் அதிமுகவுக்கு சிக்கலாக உள்ளது. அதை சரி செய்யாவிடின் இந்த தேர்தலும் அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போகலாம். அதேநேரத்தில் அதிமுக - பாஜக என 2 பெரிய கட்சிகளின் பலம் திமுகவுக்கு சில தொகுதிகளில் கடுமையான போட்டியை கொடுக்கும். அதுவே அதிமுக - தவெக கூட்டணி இணைந்தால் அரசியல் தலை கீழாக மாறி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
விஜய் சாதிப்பாரா
விஜய்க்கு அஷ்டம சனி நடைபெற்று வருகிறது. 2026 நவம்பரில் தான் சனி வக்ர நிவர்த்தியாகும். விஜய்யின் ஜாதகம் பவர்புல்லாக தான் உள்ளது. ஆனால் தனித்து நிற்கும்போது 13-17 சதவீதம் மேல் வாக்கு பெற முடியாது. இருப்பினும் தேர்தல் முடிவுகளில் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். நல்ல கூட்டணி அமைத்தால் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவி பெறலாம்.
பெரிய பதவியை பிடிக்க முடியாவிடின் அவர் அரசியலில் தொடர்வதே குதிரை கொம்பாகிவிடும். விஜய் தனிப்பட்ட ரீதியாக செல்வாக்குடன் இருந்தாலும் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கூட்டணி அவசியம். காரணம் அவருடன் இருப்பவர்களே அவருக்கு எதிராக குழிபறிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அதையறிந்து கூட்டணி அமைத்தால் பெரிய எதிர்காலம் உண்டு.
சீமான்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேஷம் ராசி. அவருக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது. எனவே கடந்த காலங்களை போல இந்த தேர்தலில் சிறப்பான வாக்கு வங்கியை பெறுவது கடினம். அவர் சிந்தித்து செயல்படாவிடின் எதிர்காலத்தில் அரசியல் கட்சி அங்கீகாரமே ரத்தாகுமளவுக்கு பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications