புதன் பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை.. 6 ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம் கொட்டும்
புதன்பெயர்ச்சி பலன்: கும்ப ராசியில் பிப்ரவரி 11 ஆம் தேதி நடக்கப்போகும் புதன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கொட்டப் போகின்றன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் புதன் கிரகம். ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறன், தர்க்க அறிவு போன்றவற்றுக்கு காரணகர்த்தாவாக புதன் கிரகம் உள்ளார். சனி பகவானின் ராசியான கும்பத்தில் புதனின் பெயர்ச்சி பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைகின்றன. கிரகங்களின் நகர்வுகள் மற்றும் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுமே அதன் தாக்கத்தை அனுபவிக்கும். அந்த வகையில், கிரகங்களின் இளவரசான புதன் பகவான் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
பிப்ரவரி 11 ஆம் தேதி மதியம் 12:58 மணிக்கு புதன் கும்ப ராசிக்குச் செல்கிறார். பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு 11:46 மணி வரை புதன் கும்ப ராசியில் இருப்பார், அதன் பிறகு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். புதனின் இந்தப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆதரவு கிடைக்கும். எந்தெந்த ராசியினர் பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்: கும்ப ராசியில் பெயர்ச்சியாகும் புதன் கிரகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுப காரியங்கள், மங்களகரமான விஷயங்களைச் செய்வீர்கள். பிப்ரவரி 11 முதல் 27 ஆம் தேதி வரை உங்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
சிம்மம்: புதனின் கும்ப ராசியில் இடமாற்ற நிகழ்வு சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கணவன், மனைவிக்குள் அன்பு பெருகும். வாழ்க்கை துணையால் ஆதாயத்தை காண்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்கான சரியான காலமாக இருக்கும். அவர்களுக்கு எதிரான உங்களுடைய செயலால் வெற்றி பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்: புதனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் காலமாக இருக்கும். பண வரவு உண்டாகும். செல்வம் பெருகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் ஆசிர்வாதத்தால் ஆதாயம் கிடைக்கும் காலமாக இருக்கும். சொந்த வீடு, நிலம், புதிய வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு. எடுத்த செயல்களில் கடின உழைப்பால் வெற்றியைக் காண்பீர்கள்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் பேச்சில் வலிமை மிக்கவர்களாக மாறுவீர்கள். எதையும் பகுத்து அறிந்து யோசித்து முடிவெடுப்பீர்கள். வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு லாபத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே இருந்ததைவிட தற்போது கூடுதல் லாபத்தை ஈட்டுவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த காலமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கேற்ற ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் ராஜவாழ்க்கை வாழ்வீர்கள். உங்களுடைய பிள்ளைகள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக உங்களுக்கு இருக்கும்.
மீனம்: கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் புதனின் மாற்றம் உங்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும். சமுதயாத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு செய்வது நல்லது. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications