தவெக சிங்கிள் டிஜிட் தொகுதியே வெல்லும்.. விஜய்க்கு வெற்றி வாய்ப்பே இல்லை.. பிரபல ஜோசியர் கணிப்பு!
சென்னை: நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து வைரல் ஆனார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
கடந்த 2023 வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றிய எனது கணிப்புப்படி ஷேக் ஹசீனா மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் 2024 இல் கவனமாக இருக்க வேண்டும், அவர் படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது நடந்து உள்ளது.

வங்கதேசத்தை துல்லியமாக கணித்தார்
அதோடு தற்போது, வங்கதேச ராணுவம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்காது. இந்தியாவைச் சுற்றி டீப் ஸ்டேட் பொறி அமைத்து வருகிறது. அடுத்த சிக்கல் இந்தியாவிற்குத்தான்.
வரும் நாட்களில் இந்தியா கவனமாக இருக்கும். டீப் ஸ்டேட் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும் நடக்க திட்டங்கள் தீட்டப்படும்.
அமெரிக்காவின் கைங்கரியமான் டீப் ஸ்டேட் உலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. அதன் அடுத்த இலக்கு நேபாளம் மற்றும் இந்தியா. நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடத்தப்படலாம். தற்போது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த குழு உள்ளது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்புவார்கள்.
சிஐஏ, மொசாத், ஐஎஸ்ஐ இணைந்து வங்கதேசத்தை வீழ்த்தியதை நான் சரியாக கணித்தேன. அதன்படியே இப்போது இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறி இருந்தார் ஜோசியர் பிரஷாந்த் கினி.
ஜோசியர் பிரஷாந்த் கினி கணிப்பு
அதேபோல் நடிகை சமந்தாவின் திருமணம் குறித்தும் துல்லியமாக கணித்தார். இந்த வருடம் சமந்தாவிற்கு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதன்படியே நேற்று சமந்தாவிற்கு திருமணம் நடந்தது.
சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு நாக சைதன்யா பற்றி எந்த இடத்திலும் சமந்தா பேசவில்லை. நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பிரஷாந்த் கினி விஜய் கணிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி விஜய் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறி உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை துல்லியமாக கணித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தோல்வி அடையும் என்றும் கணித்துள்ளனர்.
-
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications