ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.

ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை கும்பத்திற்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

aani-month-horoscope-2026-kumbam-rasi-set-to-receive-rajayoga-and-major-success-opportunities

கும்பம்

கும்ப ராசியினருக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் 2 சுபர்களான குருவும், சுக்கிரனும் 12 ஆம் இடத்தைப் பார்க்கும் மாதம். ஓடிக்கொண்டே இருப்பீர்கள். சமுதாயத்தில் பெரிய மனிதர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். ராசிக்கு இருந்து குரு பார்வை விலகி ராசிநாதனுக்கு குரு பார்வை தற்போது உள்ளதால் நிறைய நன்மைகள் நடக்கும். வரும் 15 ஆண்டுகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வேலைவாய்ப்பு

பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. நல்ல வேலைகள் கிடைக்கும். சுபக் கடன்கள் இருக்கும். வேலை மாற்றம் ஏற்படும். வேலை மாற்றம் இருந்தாலும் அது நல்ல மாற்றமாக இருக்கும். சிலருக்கு வாகனக் கடன், வீட்டுக் கடன், பர்சனல் லோன் அதன் மூலமாக நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடனுக்கு பொருள் வாங்கினாலும் அதனை அடைக்கும் அளவுக்கு வருமானங்கள் வந்து கொண்டே இருக்கும்.

லாபம்

கிழக்கு திசையில் இருந்து நிறைய லாபங்கள் கிடைக்கும். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பாதல் ஆனி மாதத்தின் இறுதி 10 நாட்கள் மிகப்பெரிய மேன்மைகள் ஏற்படும். பெண்கள், ஆண்களால் உபயோகமான சில விஷயங்கள் நடக்கும்.

மருத்துவ செலவு

5 ஆம் அதிபதி வக்ர கதியில் 5 ஆம் வீட்டிற்கே போகக்கூடிய அமைப்பு உள்ளதால் சோம்பலாக இருந்தவர்கள் எல்லாம் வெளியில் வரக்கூடிய அமைப்பு உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். அம்மாவால் சில மருத்துவ செலவுகள் வந்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. கும்ப ராசியினருக்கு இந்த ஆனி மாதம் முன்னேற்றம் தரும் மாதமாக அமையும்.

பணவரவு

தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஆன்மீகம்

இருப்பினும் உடல்நலம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டும். சிவபெருமான் வழிபாடு மற்றும் ஆன்மீக ஈடுபாடு இந்த மாதத்தில் கூடுதல் அதிர்ஷ்டத்தையும் மனநிம்மதியையும் வழங்கும். பணவரவு மற்றும் சந்தோஷம் இரண்டிலும் சாதகமான முன்னேற்றம் காணப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+