ஆனி மாத பலன்: மீனம் ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. குட்நியூஸ் காத்திருக்குது
ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.
ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை கும்பத்திற்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகளால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

மீனம்
மீன ராசியினருக்கு ராசிநாதன் உச்சத்தில் இருக்கிறார். 5 ஆம் இடத்தில் குரு சுக்கிரன் இருக்கின்றனர். அதிர்ஷ்ட ஸ்தானத்தில் 2 சுப கிரகங்கள் இருப்பது முயற்சிகளைத் தாண்டி அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கடந்த ஓராண்டாக நன்றாக இல்லையெனிலும் இனி அற்புதமாக இருக்கும். மீன ராசியினருக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.
அனுபவம்
மீன ராசியினருக்கு குடும்ப உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு நெகட்டிவான அமைப்புகள் ஏற்படும். 40, 50 வயதை கடந்தவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சனி பகவான் ஏழரை சனி காலகட்டத்திலும், அஷ்டம சனி காலகட்டத்திலும் ஒரு மனிதனை நம்பவைத்து ஏமாற்றும். ஆனால், அதற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கக்கூடிய பாடமாக அது அமையும்.
வியாபாரம்
ஜென்மசனியின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய 20, 30 வயதில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இப்போது நடக்கும் சோதனை உங்களுக்கு படிக்கட்டுகளாக அமையும். நடுத்தர வயதை தாண்டியவர்களுக்கு வியாபாரம், தொழில் நன்றாக இருக்கும். சுவாமியை மனதார வழிபாடு செய்வீர்கள். கெளரவம் ஏற்படும். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். ரிஷிகேஷ், வடமாநில யாத்திரை, திவ்யதேச தரிசனம், சித்தர் தரிசனத்திற்கு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது.
பெயர், புகழ்
விருப்பப்பட்ட புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசியில் இருக்கும் சனியை உச்ச குரு பார்ப்பதால் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தியானம், யோகா போன்றவற்றை செய்வதில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல நம்பிக்கையான உதவியாளர்கள் கிடைப்பார்கள். சோஷியல் மீடியாக்களில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது.
பதவி கிடைக்கும்
அதிகாரம், பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. அந்தஸ்து, பதவி உயர்வுகள், கெளரவம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலைகள் தீரும். நிறைய பாக்கியங்கள் கிடைக்கும். ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆணை அடக்கி ஆள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். சுப மாதமாக இந்த ஆனி மாதம் உங்களுக்கு அமையும்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications