ஆனி மாத ராசி பலன் 2023: மிதுனத்தில் சூரியன்..புதாதித்ய யோகம் தரும் புதன்..யாருக்கு ஜாக்பாட்
சென்னை: ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் பயணம் செய்வதால் மிதுன மாதம் என்று அழைக்கப்படுகிறது. கடுமையான வெயிலின் தாக்கம் மாறி இதமாக இளவேனிற் காலம் தொடங்கும் மாதம் ஆனி. ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கடக ராசியில் அமர்ந்திருக்கிறார். ஆனி 15 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்கிறார். ரிஷப ராசியில் இருக்கும் புதன் ஆனி பத்தாம் தேதி மிதுன ராசிக்கு வந்து பின்னர் 23ஆம் தேதி கடக ராசியில் அமருகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். கடக ராசியில் நிற்கும் சுக்கிரன் ஆனி 23ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார். நவ கிரகங்களின் பயணத்தால் ஆனி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
எதிரிகளை வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டுவீங்க. அரசியல்வாதிகள் பொதுச் சேவையின் மூலமாக மக்களிடம் புகழ்பெறுவீங்க. வீடு மனை வாகனங்கள் வாங்கி எதிர்காலத்துக்கு தேவையான வாய்ப்புகளை முன்னெடுப்பீங்க. பிள்ளைகளின் படிப்புக்காக கணிசமாக செலவு செய்வீங்க. நீண்ட காலமாக வரன் தேடி வந்த சிலருக்கு திருமண யோகம் கிடைக்குமுங்க. ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடு போவதற்கான யோகம் உண்டுங்க. நீண்ட காலமாக பிரச்சனை கொடுத்த நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.
ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நீங்க சாதாரணமாக பேசினாலே ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்கன்னு சொல்லி மனைவி மல்லு கட்டுவாங்க. மருத்துவம் படிக்க ஆசைப்படுகின்ற மகளுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுப்பீங்க. கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்தி பெரும் புகழ் அடைவீங்க. அரசு காண்ட்ராக்ட் களை பெறுவதில் சில சிக்கல்கள் உருவாகுமுங்க. வங்கியில் கடன் வாங்கி புதிய வீடு கட்டுவீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்ங்க. தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீங்க. தாயார் ஆசையாக கேட்ட வைரத்தோடு வாங்கி பரிசளிப்பீங்க. திடீரென்று வெளிநாட்டு பயணம் ஏற்படுமுங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.
மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்று கவலைப்படுவீங்க. அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுமுங்க. திட்டம் போட்டு கட்டிய வீட்டில் ஒட்டிக்கு ரெட்டியாக செலவு அதிகரிக்குமுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் யாரையும் அதிகமாக நம்பாதீங்க. நெருக்கமான உறவுகள் கூட நெஞ்சு அஞ்சாம பொய் சொல்ல தயங்க மாட்டாங்க. கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பிள்ளைக்கு உதவி செய்வீங்க. கண்ணால் பேசி காதல் வலை வீசிய பெண்ணின் மனதில் இடம் பிடிப்பீங்க. வியாபாரத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு கடுமையாக போராடுவீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.
கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
அரசு வேலையில் அமர ஆசைப்பட்ட சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமுங்க. தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர கடுமையாக முயற்சி எடுப்பீங்க. வெளியூர் பயணம் போனால் கண்ட இடத்தில் சாப்பிடாதீங்க. வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீங்க. பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் நீங்கி இந்த மாதத்தில் கைக்கு வந்து சேருமுங்க. பெற்றோர் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக முக்கியமான ஆலயங்களுக்கு கூட்டி செல்வீங்க. தொழிலை விரிவுபடுத்துவீங்க. சிறு வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீங்க. அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு அடைவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுமுங்க.
சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று எந்த தொழிலாக இருந்தாலும் முன்னேற்றம் அடைவீங்க. உங்களை வீழ்த்த நினைக்கின்ற எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறுவீங்க. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தங்களுடைய அர்பணிப்பான சேவையால் மக்களால் போற்றப்படுவீங்க. அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வோடு இடமாறுதலும் கிடைத்து வேறு ஊருக்கு செல்வீங்க. பைனான்ஸ் தொழிலில் நல்ல லாபம் அடைவீங்க. ரியல் எஸ்டேட் தொழில் கணிசமான வருமானத்தை தருமுங்க. மனைவி ஆசைப்பட்ட நகையை வாங்கிக் கொடுப்பீங்க. சகோதரிக்கு திருமணம் முடிப்பீங்க. புதிய வீடு கட்டி பால் காய்ச்சுவீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.
கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று மனம் வெதும்பி பாட்டு பாடும் அளவுக்கு சகோதரர்களால் சங்கடத்தை சந்திப்பீங்க. என்னதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் உங்கள் மீது பழி சுமத்த தயங்க மாட்டாங்க. வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருமுங்க. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த முக்கிய வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமுங்க. கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பீங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக விருப்பமுடன் ஈடுபடுவீங்க. தொழிலில் இருந்த இடையூறுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாத்துவீங்க. எவ்வளவுதான் அனுசரிச்சு போனாலும் மனைவியின் அவதூறு பேச்சுக்கு ஆளாவீங்க.
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.
துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உடல்நிலை சரியில்லாத தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல செய்தி கிடைக்குமுங்க. மகள் விருப்பப்பட்ட பையனை பார்த்து பேசி மகிழ்ச்சியாக மணம் முடிக்க ஏற்பாடு செய்வீங்க. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீங்க. வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. அரசாங்க கான்ட்ராக்ட்களை பெறுவதில் முனைப்பு காட்டுவீங்க. பெரியோர்களின் நல்லாசியுடன் வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடத்துவீங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.
விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
எதிர்பாராத பண வரவு கிடைத்து பழைய கடன்களை அடைப்பீங்க. பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்குவீங்க. மற்றவர் விஷயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீங்க. அதனால் சில சங்கடங்களை சந்திப்பீங்க. காதலியின் மனதை கொள்ளையடிக்க காதுக்கு பொருத்தமான கம்மலை வாங்கி பரிசளிப்பீங்க. பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வங்கியில் கடன் வாங்குவீங்க. உதவி செய்யும் மனப்பான்மையாலும் பொதுநல சேவையாலும் மற்றவர் மத்தியில் பெரும் புகழ் பெறுவீங்க. வியாபாரத்தில் சிக்கல்கள் சிரமங்கள் வந்தாலும் அதை வெற்றிகரமாக சமாளிப்பீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.
தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
செல்லமாக பிள்ளைகளை வளர்ப்பது தவறு இல்லை என்றாலும் அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க மறக்காதீங்க. இல்லையென்றால் தேவையில்லாத தலைகுனிவை சந்திப்பீங்க. யாருக்காகவும் சிந்திக்காமல் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. செலவுகள் அதிகரித்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க. முக்கிய முடிவுகள் எடுப்பதில் மனைவியின் இடையூறால் சங்கட்டப்படுவீங்க. உறவினர்கள் உங்களுக்கு எதிராக சில இடையூறுகளை செய்வாங்க. அதிலிருந்து சாமர்த்தியமாக விடுபடுவீங்க. வியாபாரம் சீராக நடக்குமுங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் சுணக்கமான நிலை உருவாகுமுங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.
மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வாகனங்களில் போகும்போது கவனத்தை சிதற விடாதீங்க. சின்ன விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டுங்க. வெளியூர் செல்லும் போது வீட்டை நன்கு பூட்டிவிட்டு போங்க. பணம் நகைகளை வீட்டில் வைக்காதீங்க. வங்கி கடனை அடைப்பதில் அலட்சியமாக இருந்தீங்கன்னா வீடு தேடி நோட்டீஸ் வருமுங்க. யாரையும் எடுத்தெறிந்து பேசாதீங்க. உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலை பேசி தீர்ப்பது நல்லதுங்க. கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்தில் வில்லங்கம் உருவாகி சிக்கலை ஏற்படுத்துமுங்க. சட்டப்படி அதை நிவர்த்தி செய்ய பாருங்க. அரசு ஊழியர்கள் அக்கறையோடு வேலை செய்யுங்க. இல்லையென்றால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.
கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
இதுவரை இழுபறியாக இருந்த சிக்கலை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்பதற்கு இணங்க உங்களிடம் உதவி பெற்றவர் தக்க சமயத்தில் தோள் கொடுத்து காப்பாற்றுவாருங்க. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படுமுங்க. வாதம் விதண்டாவாதம் பிடிவாதம் ஆகியவற்றை கைவிட்டு ஒத்துப்போக பாருங்க. வெயில் அதிகமாக இருக்கிறதே என்று ஐஸ் தண்ணி குடிக்காதீங்க. சுவாச பிரச்சனையில் கொண்டு போய் நிறுத்துமுங்க. தோப்புக் குத்தகை மூலமாக வருமானம் கிடைக்குமுங்க. ஆடு மாடு கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீங்க. வில்லங்கமான விஷயத்தில் தலையிடாதீங்க. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.
மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வேலை இடத்தில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சின்ன சின்ன சிக்கல்களில் மாட்டிக் கொள்வீங்க. குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய கொஞ்சம் சிரமப்படுவீங்க. அவசரமான காரியத்திற்காக வாங்கிய கடனை உரிய காலத்தில் அடைக்கவில்லை என்றால் நல்ல உறவு கெட்டுப் போகுமுங்க. வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்குமுங்க. ஐஏஎஸ் ஐபிஎஸ் பரீட்சை எழுத ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகுமுங்க. அவசியமான நேரத்தில் மனைவி சேமித்த பணத்தை கொடுத்து உதவி செய்வாங்க. இரவு நேர பயணத்தை ஒத்தி போடுவது நல்லதுங்க. காதலியிடம் பொய் சொல்லி மாட்டிக் கொள்ளாதீங்க. உறவு பிரிந்து போக வாய்ப்பு உண்டுங்க.
அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையுமுங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications