ஆவணி மாத ராசி பலன் 2023: ஆடி போய் ஆவணி வந்தால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்
சென்னை: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி போய் ஆவணி வந்தால் அத்தனை நன்மைகளும் தேடி வரும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஆவணி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.
ஆவணி மாத சிறப்புகள்: ஆவணி மாதம் சிவபெருமானை வணங்குவதற்கு ஏற்ற மாதமாக திகழ்வதால் திங்கள், வியாழன் ஆகிய கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டால் நற்பலன்களை பெறலாம். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிக மேன்மையான பலன்களை கொண்டு வரும் என்பது ஐதீகம். ஆவணி மாத செவ்வாய் வெள்ளி ஆகிய கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மங்கள கௌரி விரதம் இருந்து பராசக்தியை வழிபடுவார்கள். இது மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும் என்பதோடு பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வரும் என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆவணி மாதத்தில் திருமணம் செய்தால் கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. திருப்பாற்கடலை கடைந்து அமிழ்தம் எடுத்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டதும் ஆவணி மாதத்தில் தான்.

ஆவணி மாத கிரகங்களின் சஞ்சாரம்: ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். ஆவணி 2 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார்.
மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... தொழில்துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் காண்பீங்க. செவ்வாயும் சுக்கிரனும் ஐந்தாம் இடத்தில் இணைந்திருப்பதால் காதல் திருமணம் செய்து கொள்வீங்க. குழந்தை இல்லாதவர்களுக்கு மனக்கவலை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பை சிவபெருமான் கொடுப்பாருங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட படிப்பை தொடர சிரமப்பட்டு வழி அமைத்துக் கொடுப்பீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஏற்றம் பெறுவீங்க. வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்புவீங்க. வீட்டில் மங்கல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீங்க.
திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.
ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... புதிய வீடு கட்டி மகிழ்ச்சியோடு புதுமனை புகுவிழா நடத்துவீங்க. பெற்றோர்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி படுத்துவீங்க. விட்டுப்போன உறவுகளை ஒன்று சேர்ப்பதில் முனைப்பு காட்டுவீங்க. குலதெய்வ வழிபாடு செய்வதற்காக குடும்பத்தினரோடு செல்லுவீங்க. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி நிச்சயமாக கிடைக்குமுங்க. புதிய தொழில் தொடங்குவீங்க. உங்களுக்கு போட்டியாக இருந்தவங்களை களை எடுப்பீங்க. அரசாங்க கான்ட்ராக்ட் பெறுவதற்கு அரசியல்வாதியின் உதவியை நாடுவீங்க. நிலம் வாங்கி விற்பதில் நல்ல லாபம் பெறுவீங்க. பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்குவீங்க. வியாபாரிகள் சிறப்பான நற்பலன்களை பெறுவீங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.
மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
நினைத்த காரியத்தை நடத்தி குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீங்க. அரசியல்வாதிகளின் நட்பால் உறவினர்கள் மத்தியில் நல்ல அந்தஸ்தை பெறுவீங்க. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மனதில் வைத்து தொழில் துறையில் மிக சாமர்த்தியமாக காய் நகர்த்துவீங்க. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருந்து மாறி வியாபாரத்தை விருத்தி செய்வதில் அக்கறை காட்டுவீங்க. தங்கையின் குடும்பத்திற்கு உதவி செய்து பொறுப்புள்ள மனிதன் என்பதை நிலை நாட்டுவீங்க. கொடுக்கல் வாங்கலில் நீக்குப் போக்கோடு நடந்து கொள்வீங்க. பெரிய மனிதர்களின் ஆசியால் சில ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீங்க. பழைய வீட்டை ரெனிவேஷன் செய்து அழகுபடுத்துவீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.
கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
'ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்ரு' என்பதை மனதில் வைத்துக்கொள்ள மறக்காதீங்க. அதிக லாபம் கிடைக்கிறதே என்று அகலக்கால் வைக்காதீங்க. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க தவறாதீங்க. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்குமுங்க. அதே நேரத்தில் யாரிடமும் நம்பி பணத்தை கொடுக்காதீங்க. திரும்பி வாங்க சிரமப்படுவீங்க. வாகனங்களில் போகும்போது எச்சரிக்கையாக இருங்க. வெளியூர் செல்லும் போது வீட்டில் உள்ள பொருட்களை பத்திரப்படுத்தி விட்டு சொல்லுங்க. வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. திடீர் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகுமுங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.
சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... மகனுக்கு பெண் அமையவில்லையே என்று சிலர் மனக்கவலை அடைவீங்க. கூடிய விரைவில் உறவினர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீங்க. தொழில் துறைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமுங்க. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் சிறப்பான பலன்களை பெறுவீங்க. மற்றவர்களுக்கு செய்யும் உதவியால் சமூகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்குமுங்க. ஆசைப்பட்ட வாகனத்தை வாங்கி மகிழ்ச்சி அடைவீங்க. பிள்ளைகளின் கல்விக்காக வங்கியில் கடன் பெறுவீங்க. உயர்ந்த படிப்புக்காக சிலர் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீங்க. 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று உங்களுக்கு எதிராக உங்களுடைய மூத்த சகோதரரே பிரச்சனை செய்வாருங்க. அதிலிருந்து தப்பிக்க வழக்கறிஞரின் உதவியை நாடுவீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.
கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... வெட்டித்தனமாக பேசுவதை விட்டுவிட்டு கெட்டிக்காரத்தனமாக பிழைக்கும் வழியை பாருங்க. தொழில் துறைகளில் அலட்சிய போக்கை கடைபிடிக்காதீங்க. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுப் போக தவறாதீங்க. இல்லையென்றால் கோர்ட் படிக்கட்டை மிதிக்க வேண்டிய நிலை உருவாகுமுங்க. தொழில் போட்டிகளை எதிர்கொள்ள மனதளவில் வியூகம் வகுத்து செயல்படுவீங்க. புதிய வீடு கட்டுவதற்காக வாஸ்து செய்வீங்க. மகளுக்கு வீட்டுமனை வாங்கி கொடுப்பீங்க. தாய் தந்தையரின் ஆசையை நிறைவேற்றி வைப்பீங்க. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் வேலை மாறுதலும் கிடைக்குமுங்க. நீங்கள் எதிர்பார்த்த காண்ட்ராக்ட் கிடைத்து சந்தோஷப்படுவீங்க. ஏதோ ஒரு மனக்கவலை உங்கள் இதயத்தை பிசைந்து கொண்டிருப்பதை உணர்வீங்க. அதிலிருந்து விடுபடுவதற்கு திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை வழிபட்டு வருவீங்க.
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.
துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தொழிலை சேரும்' என்று பொருளாதார முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்பீங்க. கடுமையான முயற்சியால் வியாபாரத்தை விருத்தி செய்து போட்டியாளர்கள் முகத்தில் கரியை பூசுவீங்க. பங்குச்சந்தை வியாபாரம், ஆன்லைன் வர்த்தகம் அமோகமான லாபத்தை கொடுக்குமுங்க. மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக வெளிவட்டார செல்வாக்கை உயர்த்தி கொள்வீங்க. கடல் கடந்து வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பீங்க. அதில் வெற்றியும் பெறுவீங்க. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வீங்க. சிலர் வீட்டில் மழலை செல்வம் உண்டாகி மகிழ்ச்சியை ஏற்படுத்துமுங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட கல்லூரியில் சேர்த்து விடுவீங்க. பெற்றோரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வீங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.
விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
'ஒன்னா இருக்க கத்துக்கணும், இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்' அப்படிங்கிற பாணியில உறவுகளை ஒன்று சேர்க்க பாடுபடுவீங்க. வறுமையில் வாடும் சகோதரியின் குடும்பத்துக்கு தக்க சமயத்தில் உதவி செய்வீங்க. வியாபாரம் நிமித்தமாக சில நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீங்க. கூட்டுத் தொழில் மூலமாக உயர்வான பலனை அடைவீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக கவனம் செலுத்துவீங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமுங்க. நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவி கிடைக்குமுங்க. அரசு ஊழியர்கள் கவனமாக வேலை பார்க்கணுமுங்க. இல்லை என்றால் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்வீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.
தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
மனதில் பட்டதை பேசி தேவையில்லாத விவகாரத்தில் மாட்டிக் கொள்ளாதீங்க. புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீங்க. துணி வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீங்க. அலைச்சல் அதிகமானாலும் வியாபாரத்திற்கு தேவையான ஆர்டர்களை பெறுவதில் வெற்றி அடைவீங்க. உங்களை ஏமாற்ற நினைக்கும் போட்டியாளர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவீங்க. வீட்டில் திடீரென திருமண ஏற்பாடு நடந்து கெட்டி மேளம் கொட்டுவீங்க. மனைவியிடம் மல்லு கட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்க. கொஞ்சம் அனுசரிச்சு போனா பிரச்சனை இருக்காதுங்க. பிள்ளைகளால் பெருமைப்படுவீங்க. அக்கறையோடு படிப்பதற்கான ஏற்பாட்டை செய்து கொடுப்பீங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.
மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வியாபாரத்தை நிதானமாக நடத்துங்க. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அவஸ்தையில் மாட்டிக் கொள்ளாதீங்க. உங்கள் யோசனைக்கு முடிவு எடுங்க. அடுத்தவர் பேச்சை அப்படியே நம்பாதீங்க. வீட்டில் மனைவி பிள்ளைகளின் பேச்சுக்கு மரியாதை கொடுங்க. நியாயம் பேசுகிறோம் என்று சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்ப்பீங்க. கேட்ட இடத்திலிருந்து உடனே பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீங்க. தொழில்துறையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமுங்க. வாங்கிய இடத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீங்க. வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை சந்திப்பீங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.
கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
காதலித்த பெண்ணையே திருமணம் செய்ய கடுமையாக பாடுபடுவீங்க. வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் சொந்தமாக முடிவெடுப்பீங்க. ஐடி துறையில் வேலை பார்க்கும் கணவன் மனைவி இருவரும் புரிந்து நடந்து கொண்டால் பிரிந்து போவதற்கான நிலை ஏற்படாதுங்க. தொழில் துறைகள் மந்தமான நிலையிலேயே நடக்குமுங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த சில திட்டம் போடுவீங்க. ஆனால் அது நிறைவேறாமல் கவலைப்படுவீங்க. புதிய வீடு மாறுவதற்காக ஏற்பாடு செய்வீங்க. அரசு ஊழியர்களுக்கு இடம் மாறுதல் ஏற்படுமுங்க. கடுமையான முயற்சிகளுக்கு பின்னே காரியங்கள் நிறைவேறுமுங்க. வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீங்க. வீட்டில் மரியாதை இல்லையே என்று மன குழப்பம் அடைவீங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.
மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
சேற்றுக்குள் விழுந்த சிங்கம் சிலிர்த்து எழுவது போல் எத்தனை சிரமங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவீங்க. நீண்ட காலமாக தொழிலுக்கு இருந்த தடையை வெற்றிகரமாக தகர்த்து எறிவீங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அரிய காரியங்களை செய்வீங்க. மனைவி பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீங்க. பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைய வைப்பீங்க. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருமுங்க. வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுமுங்க. சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. நீண்ட காலமாக தொந்தரவு செய்த கால் வலிக்கு நிவாரணம் கிடைக்குமுங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications