ஐப்பசி மாத பலன்: குரு, செவ்வாய் அருளால் மேஷ ராசிக்கு ராஜயோகம்.. முழு பலன்கள் இதோ
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்ன ராசக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், இந்த ஐப்பசி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று அக்டோபர் 10 ஆம் தேதிக்குப் பிறகு வருகிறார். செவ்வாய் ஆட்சி பலம் பெற்று குருவின் பார்வையில் இருக்கிறார். குருவும் உச்சம், செவ்வாயும் ஆட்சி என்பதால் யோகமான காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம், திடீர் வரும், பண வரவு ஆகியவை ஏற்படும்.
குருவின் பார்வை இருக்கும்போது அதீத நன்மைகளைப் பெறுவீர்கள். ஏதாவது தேவை, உங்களுக்கு வேண்டும், சுய தேவை நிறைவேற வேண்டும் என்று நினைப்போருக்கு குரு பார்வையில் செவ்வாய் இருக்கும் காலகட்டத்தில் செய்யும்போது மிகப்பெரிய யோகமாக மாறும். 2 மற்றும் 7 ஆம் இடத்துக்கு அதிபதியான சுக்கிரன் வரும் 16 ஆம் தேதி வரை நீச்சமாக இருப்பதால் பணம் சார்ந்த விஷயங்கள், குடும்பம், திருமணம் சார்ந்த விஷயங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும்.
திருமண யோகம்
இதுவரை திருமணத்தில் வரன் வந்தாலும் அமையாமல் இருந்திருக்கும். பெண்ணுக்கு பிடிக்கவில்லை, மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்கிற தன்மை எல்லாம் நீங்கி பணம் சார்ந்த விஷயம், திருமணம் சார்ந்த விஷயத்தில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுக்கிரன் நீச்சமாக அக்டோபர் 16 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரனுடன் சேர்ந்து மகா ராஜ யோகத்தைப் பெறுவதால் நல்ல வரன்கள் வரும். பண செழிப்பு உண்டாகும்.
சுக்கிரன் என்பவர் மேஷ ராசிக்கு யோகத்தை அதிகமாக வழங்கக் கூடியவராக இருப்பார். புதன் 3 மற்றும் 6 ஆம் வீட்டின் அதிபதி. புதன் 8 ஆம் வீட்டில் இருந்தாலும் குருவின் பார்வையில் வருவதால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன் தீரும். கடன் சார்ந்த பாதிப்புகள், பிரச்சனைகள் நீங்கும். வேலை செய்யக்கூடிய பிரச்சனைகளை சந்திப்போருக்கு அனைத்து பிரச்சனையும் நீங்கும். இடமாற்றம், வேலைமாற்றம் கட்டாயமாக உண்டாகும்.
ராஜயோகம்
தொலைத்தொடர்பு, கம்யூனிகேஷன் அதிகரிக்கும். கூட பிறந்த சகோதரர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் உங்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். சூரியனைப் பொருத்தவரை நீச்சத்தில் இருக்கிறார். ஆனால் சுக்கிரன் இணையும்போது நீசபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். இது விபரீத ராஜயோகமாக மாறுவதால் நல்ல பண வரவு உண்டாகும்.
குழந்தைகளால் மன திருப்தி உண்டாகும். அதிர்ஷ்டம் பெருகும். திடீர் வருமானம், அதிர்ஷ்டம் ஏற்படும். மறைந்தவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும் யோகம் உண்டாகும். குரு கடகத்துக்கு ஆட்சி பலம் பெற்று வருவதால் தாய், தந்தையின் மூலம் ஆதாயம் பெறும் யோகம் உண்டாகும். சொத்துகள் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு போன்ற அனைத்தும் கிடைக்கும்.
சொத்து பிரச்சனைகள் நீங்கும். வீட்டுக் கடன்கள் கிடைக்கும். வீடு கட்டும் யோகம், வாகனங்கள் வாங்கும் யோகம், சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications