Lucky Zodiac Signs: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 6 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ஐப்பசி மாத பலன் 2025: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார், கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும். இந்த ஐப்பசி மாதத்தில் யோகம் பெறும் ராசியினர் குறித்து இங்கு பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்
விருச்சிகம், கடகம், மீனம், கன்னி ஆகிய நான்கு ராசிகளுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். திடீரென்று ராக்கெட் வேகத்தில் உங்கள் பெயர், புகழ், பொருளாதாரம் உயரும். வாழ்க்கையே திருப்பி போட்டது போல திடீர் அதிர்ஷ்டங்கள் வரிசை கட்டும். உத்யோகம், தொழில் இரண்டிலும் மிகப்பெரிய ஏற்றம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
பண வரவு பெறும் ராசிகள்
மிதுனம் ராசிக்கு பிரச்சனைகள் இருந்தாலும் பண வரவு நன்றாக இருக்கும். துலாம் ராசிக்கு உத்யோகத்தில் பெரிய மாற்றம், முன்னேற்றம் இருக்கும். மீனம், விருச்சிகம், கடகம் ராசிகளுக்கு சொந்த வீடு கனவு நனவாகும். வீடு, நிலம் வாங்குவார்கள். பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள்.
டும் டும் கன்ஃபார்ம்
இவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விலகுவார்கள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிகளுக்கு சுப காரிய தடைகள் விலகும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் கெட்டி மேள சத்தம் நிச்சயம் கேட்கும். நல்ல செய்தி வீடு தேடி வரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications