Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன் 2020: நீச்சமடையும் சூரியன் சுக்கிரனால் யாருக்கு ராஜயோகம்

ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை தரக்கூடியது, சூரியன் துலாம் ராசியில் நீசமடைய, சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாத விஷு புண்ணிய காலம் பிறந்துள்ளது. சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இது துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி நதியில் நீராடினால் பாவங்கள் போகும். சுக்கிரன் கன்னி
ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகங்களின் நீச சஞ்சாரங்களினால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் நவராத்திரியுடன் தொடங்கியுள்ளது. இந்த மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம். சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கந்த சஷ்டி, ஐப்பசி பவுர்ணமி என பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். சுக்கிரன் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசியில் நீசம் பெற்று அமர்கிறார். புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ஐப்பசி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் அற்புதமாக அமைந்துள்ளது. புதிய தொழில் தொடங்கலாம் வாகனம் வாங்கலாம். சொத்துக்கள் வாங்கலாம். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. குருவினால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தினை விரிவு படுத்தலாம். நன்மைகள் அதிகமாகும். நண்பர்களால் உதவி கிடைக்காது. விஐபிகள் நட்பு எற்படும். சூரியன் நீசமாக இருந்தாலும் ராஜயோகம் வரும். நீச்சபங்கமாகும் சுக்கிரன் நன்மையை செய்வார் என்றாலும் தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் தேவையில்லை. அடுத்தவர் பிரச்சினையில்
தலையிட வேண்டாம், பதவி தேடி வரும். சுக்கிரன் நீச்சமடைவதால் பிரச்சினைகள் எளிதில் சமாளிப்பீர்கள். வேலைக்கு செய்பவர்களுக்கு வேலையில் மாற்றம் வரும் வெளிநாடு யோகம் வரும். குருவின் பார்வை வருவதால் சுப காரியங்கள் தடையில்லாமல் நடக்கும் குல தெய்வ வழிபாடு நன்மையை தரும். நிறைய சம்பளத்தில்
நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றம் வரும் கவலைகள் நீங்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. அஜீரண கோளாறுகள் வரும் பத்ரகாளியை வணங்குங்கள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

ரிஷபம்

ரிஷபம்

ஐப்பசி மாதத்தில் உங்க ராசிநாதன் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார்.
இந்த மாதத்தில் வீண் செலவுகள் அதிகமாகும் செலவில் சிக்கனம் தேவை. செவ்வாய் பலமாக 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகோதரர்களுடன் இணக்கம் அதிகரிக்கும் சொத்துப்பிரச்சினைகள் சுமூகமாக முடியும். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். உணவு பொருள், ஜவுளி வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம். மறைமுக போட்டிகள் அதிகரிக்கும் வேலைச்சுமை கூடும். சுக்கிரன் நீச பங்கம் அடைவதால் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நெருங்கிய உறவினர்களால் செலவு கூடும் சிவ பெருமானை வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே, ஐப்பசி மாதத்தில் சுக்கிரன் மூன்றாவது வீட்டில் இருந்து நான்காவது வீட்டில் நீச்சம் பெற்று அமர்கிறார். சூரியன் ஐந்தாம்
வீட்டில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். வீட்டில் சுப காரியம் நடைபெறும். மகன் மகளுக்கு திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ராசி நாதன் புதன் சூரியனுடன் இணைவதால் தைரியம் அதிகரிக்கும். அஷ்டம சனி ஆட்டி படைக்கும், வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். செலவுகள் கூடும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரும்.
குருவின் அனுக்கிரகம் கூடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ சரியாகும். கர்ப்பிணிகள் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். மதுரை மீனாட்சியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு தானம் பண்ணுங்கள்.
மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் மாதம்.

கடகம்

கடகம்

ஐப்பசி மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு அருமையான மாதம். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சூரியன் நான்காம் வீட்டில் புதனோடு இணைகிறார் உங்களுடைய செல்வாக்கு அதிகமாகும். புதிய முதலீடுகள் லாபம் தரும். நிறைய பேர் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பழைய நண்பர்களுடன் இருந்த உரசல் நீங்கும். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். புதிய நபர்களை நம்ப வேண்டாம். அதிக முதலீடுகளை தவிர்க்கவும். வாடிக்கையாளார்கள் அதிகமாவார்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். வேலையில் இழந்த செல்வாக்கு மீண்டும் வரும். கண்டகச்சனி இருப்பதால் முன்கோபத்தை தவிர்க்கவும். குல தெய்வ கோவிலுக்கு போய் தரிசனம் செய்வது நல்லது.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அற்புதமாக இருக்கிறது. சூரியன் நீச்ச கதியில் இருந்தாலும் புதனுடன் இணைந்திருப்பதால் வெற்றி கிடைக்கும் தைரியமாக எந்த காரியத்தையும் செய்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகமாகும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் அமர்வதால் யோகம் கூடும். நல்ல வேலை கிடைக்கும். நகை வாங்கலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும்
மகளுக்கு நல்ல வரன். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.
செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.
அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.லாபம் அமோகமாக இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்து சலுகைகள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள், வங்கி லோன் அப்ளை செய்திருப்பவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும் பணவரவு அதிகமாகும். தானம் செய்வது வெற்றியை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

சூரியன் இரண்டாம் வீட்டிற்குள் நீச்சமடைந்து சஞ்சரிக்கிறார். உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிந்தனையில் குழப்பம் நீங்கி தெளிவு
பிறக்கும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். அக்டோபர் 23 முதல் சுக்கிரன் உங்க ராசியில் நீசமடைவதால் உறவினர்களிடம் இருந்த பிரச்சினை நீங்கும். திடீர் திருமணம் கை கூடி வரும். வியாபாரம் அருமையாக இருக்கும். பழைய
பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். ஆன்மீக பயணம் அற்புதமாக இருக்கும். பத்தாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் வேலைச்சுமை அதிகரிக்கும் சகோதர வகையில் செலவுகள் கூடும். கணவன் மனைவி இடையே ஆரோக்கியமான விவாதம் வரும் ஐப்பசி மாதம் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்தையும் தரும்.
ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை ஒருமுறை தரிசனம் செய்வது வருவது நல்லது.

துலாம்

துலாம்

சூரியன் உங்க ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்துள்ளார். உங்களுக்கு இருந்த
பிரச்சினைகள் நீங்கும், மன உளைச்சல் தீரும். கோபம் டென்சனை கட்டுப்படுத்துங்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். ஷேர் மார்க்கெட் மூலம்
பணம் வரும் செல்வாக்கு அதிகரிக்கும். சுக்கிரன் 12அம் விட்டிற்கு வருவதால் சோர்வு களைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் சாதகமா உள்ளது. பிரபலங்கள் அறிமுகம் கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களால் சந்தோஷம் கூடும். புதிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும் உங்களின் செல்வாக்கு கூடும். திருமணம் கூடி வரும் வாய்ப்புகள் உள்ளது வீடு மாறும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

ஐப்பசி மாதத்தில் சூரியன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் சுக்கிரன் சாதகமாக உள்ளார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே ஈகோ அதிகமாகும். வேலையில் கவனமாக இருங்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலை சுமை கூடும். நண்பர்கள் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சூரியன் 12ஆம் வீட்டில் மறைவது யோகம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை நீங்கும்.
புதிய முயற்சிகள் பலிதமாகும்.வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
சகோதரர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். அம்மன் வழிபாடு மன அமைதியை தரும்.

தனுசு

தனுசு

யோகாதிபதி சூரியன் யோகத்தை கொடுக்கப்போகிறார். தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். புதிய தொழில் தொடங்கலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரும். உங்களின் செல்வாக்கு அதிகமாகும். சுக்கிரன் 10வது வீட்டிற்குள் வந்து மறைகிறார். எதிரிகளால் இருந்த மறைமுக தொல்லைகள் நீங்கும். வீடு மனை வாங்கி விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

மகரம்

மகரம்

சூரியன் பத்தாம் வீட்டில் நீச்சமடைந்து சஞ்சரித்தாலும் சுகங்கள் அதிகமாகும்.
அப்பாவுடன் இருந்த மன கசப்புகள் நீங்கும். மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம், இருக்கும் வியாபாரத்தை
விரிவுபடுத்துங்கள். ரொம்ப பரபரப்பாக இருப்பீர்கள். சுக்கிரன் 23ஆம் தேதி 9வது வீட்டிற்கு வருவதால் பணப்புழக்கம் அதிகமாகும். பிள்ளைகளின் திருமணம் விசயமாக பேசலாம் வெற்றிகள் தேடி வரும். பிள்ளைகளுக்கு நிச்சயம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். ஷேர்மார்க்கெட் முதலீடுகள் மூலம் லாபம் வரும். வேலையில் மிகப்பெரிய பதவிகள் வரும். வண்டி வாகனம் புதிதாக வாங்கலாம். நகை வாங்குவீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதத்தை தரும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதத்தில் சூரியன் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் உங்களின் அழகும் இளமையும் பொலிவாக இருக்கும். சுக்கிரன் எட்டில் மறைவதால் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பண விவகாரங்களில் கொஞ்சம் கவனமும் நிதானமும் தேவை. ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் அப்பாவிற்கு மன வருத்தம் வரும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செல்வாக்கு கூடும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். கடந்த காலத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரம் அருமையாக இருக்கும். வேலையில் இருந்த மனச்சுமை நீங்கும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, சூரியன் உங்க ராசிக்கு எட்டில் மறைகிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சுக்கிரன் 7ஆம் வீட்டில் வருவதால் சந்தோஷம் கூடும் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும் புது சொத்துக்கள் வரும். இரட்டிப்பு லாபம் அதிகமாகும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாத போக்கு நீங்கும். குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுங்கள். ஐப்பசி மாதம் அருமையான மாதமாக ஐஸ்வர்யம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+