தனுசு ராசிக்கு ஐப்பசியில் ஜாக்பாட்.. பணவரவு, சம்பள உயர்வு என காத்திருக்கும் யோகம்!

Subscribe to Oneindia Tamil

ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

aippasi-month-rasi-palan-sudden-luck-awaits-dhanusu-rasi-natives-lucky-jackpot-in-aippasi

சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு கொண்டாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் 11 ஆம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். பாக்கியாதிபதி நீச்சத்தை அடைந்தாலும் கூட 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் பிற்பகுதி அதாவது 15 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் அதிசாரப் பெயர்ச்சியாக 9 ஆம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கிறார்.

அதிர்ஷ்டம் கொட்டும்

அதிர்ஷ்டங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய யோகமான நேரம். கனவுகள் எல்லாம் நிறைவேறும். சந்தோஷம் நிறைந்திருக்கும். துயரம் பரிபூரணமாக விலகும். பாதிப்புகள், சங்கடங்கள் எல்லாம் தீரும். நினைத்தவை அனைத்தும் நடக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். வெற்றிகள் கிடைக்கும்.

பணவரவு

காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பண வரவு அற்புதமாக இருக்கும். வெற்றிகள் கிடைக்கும். தொழில் அற்புதமாக இருக்கும். வேலை, வியாபாரம் போன்றவை லாபகரமாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு இருந்து வந்த தடைகள் தாமதங்கள் பரிபூரணமாக விலகும்.

புரோமோஷன்

விரும்பிய வேலை, விரும்பிய துறை கிடைக்கும். நிறுவனத்திற்குள் டிரான்ஸ்பர் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். அப்பாவால் சிறிது செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வயதான தாய், தந்தைக்கு ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரும் என்பதால் கவனம் தேவை.

ஆரோக்கியம்

தொலைதூரத்தில் இருப்பவர்களின் பெற்றோர் சொந்த ஊரிலேயே இருக்க விரும்புவார்கள். அம்மா, அப்பாவைப் பற்றிய சிறு சிறு கவலைகள் வந்து சேரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறு சிறு செலவுகள் வந்து போகும். தந்தை சொல்வதை செய்ய முடியாமல் போவது போன்ற நிலைமைகள் இருக்கும். நினைத்ததை சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

யோகம்

14 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் 9 ஆம் இடத்துக்கு வந்து ராசியைப் பார்ப்பதால் புகழ் கிடைக்கும், கலைத் துறையில் வாய்ப்பு கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்கான அற்புதமான யோகம் உண்டு. பொற்காலமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமையும். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+