அட்சய திருதியை: கோடீஸ்வர யோகம் பெறும் 7 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Atchaya Tritiya: அட்சய திருதியை நன்னாள் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொன்னான நாளில் கோடீஸ்வர யோகம் பெறும் 7 ராசியினர் யார், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. திருதி என்பது மூன்றாவது திதி. திருதியை என்பது வளர்வது, பிறை என்று அர்த்தம். வளர்பிறையில் வரக்கூடியது திருதியை. சந்திரனும், சூரியனும் உச்சமாக இருப்பதே அட்சய திருதியை என்று கூறப்படுகிறது. அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை ஆகும். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் ஆகும்.

அட்சய திருதியை தினத்தன்று சனி, ராகு, சுக்கிரன் 12 ஆம் வீட்டிலும், சூரியன், சந்திரன் உச்சமாகவும், செவ்வாய் நீச்சமாகவும் இருக்கும். அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருள்களை வாங்கினாலும் அல்லது முதலீடு செய்தாலும், தொடங்கினாலும் அது செழித்து வளரும் என்பது நம்பிக்கை.
குபேர அட்சய திருதியை நாள் ரோகிணி நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. அன்றைய தினத்தில் 7 ராசிக்காரர்களுக்கு தெய்வீகமான யோகங்கள் வரப் போகின்றன. கோடீஸ்வர யோகம் பெறும் அந்த ராசியினர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு கஜகேசரி யோகம் வரப் போகிறது. இந்த காலகட்டம் உங்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். செல்வம், சொத்து மற்றும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை மதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அபரிமிதமான லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியினருக்கு சர்வார்த்த சித்தி யோகம் உண்டாகிறது. இந்த யோகமானது அற்புதமான பலன்களை அள்ளித் தரப் போகிறது. பழைய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டம். எதிர்பாராத சொத்துகளின் மூலமாக லாபம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் உண்டாகப் போகிறது. இந்த யோகத்தால் சுபமான பலன்களைப் பெறுவீர்கள். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் திடீர் பெரிய லாபங்கள் உண்டாகும். எதிர்பாராத கடன்கள், முதலீடுகள் உங்களைத் தேடி வரும். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மாள்வள்ய ராஜயோகத்தை பெறப் போகின்றனர். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைப் பெறுவீர்கள். காதல் உறவுகளில் இனிமை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நிதித் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையில் புகழ் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். முதலீடு பல மடங்குகளில் வந்து சேரும்.
விருச்சிகம்
குரு, சந்திரன் சேர்க்கையுடன் வரக்கூடிய கஜகேசரி யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உண்டாகப் போகிறது. புதிய வருமானம், புதிய வருமானத்துக்கான வாய்ப்புகளும், தொடர்புகளும், தொழில்களும் உங்களை நோக்கி வந்து சேரும். மன வலிமை அபரிமிதமாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். நல்ல தொழில் கூட்டாளி கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்
மாள்வள்ய ராஜயோதகம் மகர ராசியினருக்கு வரப் போகிறது. வாழ்க்கையில் ஆடம்பரம், வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை, பதவி உயர்வு கிடைக்கும். வாகனம், சொத்து வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டாகும். மீண்டும் உங்கள் தொழிலில் தலையெடுத்து வெற்றி பெறுவதற்கான சூழல் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சதுக்கிரஹி யோகத்தால் அமோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். புதிய வேலை தொடங்க சிறந்த காலகட்டமாக இருக்கும். வெளியில் சிக்கியிருக்கும் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டுக்குச் செல்ல, வெளிநாட்டில் இருந்து பயணடைய வாய்ப்புள்ளது. மன அமைதி, ஆன்மிக வளர்ச்சி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.












Click it and Unblock the Notifications