"தேடித் தேடி அலுத்துப்போனோம்... ஒரு பல்லியைக் காணோமே!" அட்சய திருதியை 'பல்லி' ஸ்பெஷல்
சென்னை: அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை ட்ரெண்ட் அப்படியே 'பல்லி' பக்கம் திரும்பியிருக்கிறது! ஆமாங்க... காலையில எழுந்து நகைக்கடைக்கு ஓடியவர்களை விட, வீட்டின் மூலை முடுக்குகளில் "பல்லி எங்கேயாவது இருக்கா?" என டார்ச் அடித்துத் தேடியவர்கள்தான் அதிகம்.

வாஸ்து பகவானின் உத்தரவு
சாஸ்திரப்படி, அட்சய திருதியை அன்று ஒரு பல்லியைப் பார்த்தால் ஏழேழு ஜென்மத்துப் பாவமும், தரித்திரமும் காணாமல் போகுமாம். ஆனால் இங்கேதான் ஒரு ட்விஸ்ட்! அன்றைய தினம் பல்லிகள் எதுவும் யாருடைய கண்ணிலும் படக்கூடாது என 'வாஸ்து பகவான்' ஒரு ரகசிய உத்தரவு போட்டிருப்பதாகச் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் புது புது ஜோதிடர்கள் சொல்லிவிட்டனர். இதனால், ஊர் முழுக்க இருக்கும் பல்லிகள் அனைத்தும் 'அண்டர் கிரவுண்டில்' போய் ஒளிந்துகொண்டன என்று நம்பிய மக்கள், பல்லியை தேடி அலைந்தனர்.
பல்லி தரிசனம் - ஒரு 'மிஷன் இம்பாசிபிள்'
"வீடு முழுக்கத் தேடியும் ஒரு வால் கூட சிக்கலையே!" என மக்கள் புலம்பும் அளவுக்குப் பல்லிகள் இன்று டிமிக்கி கொடுத்துவிட்டன. இந்த 'டிமாண்ட்' காரணத்தாலோ என்னவோ, நேற்று காலையிலிருந்து கூகுளில் மக்கள் "பல்லியை எங்கே பார்ப்பது?", "பல்லி ஒளிந்திருக்கும் இடம் எது?" எனத் தேடித் தள்ளியுள்ளனர்.
அதிர்ஷ்டசாலிகள் யார்?
இவ்வளவு தடைகளையும் தாண்டி, வாஸ்து பகவானின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, ஏதாவது ஒரு பல்லி உங்கள் கண்ணில் பட்டுவிட்டால்... நீங்கள் தான் நேற்றைய 'லக்கி ஸ்டார்'! அந்தப் பல்லியைப் பார்த்ததுமே ஒரு கும்பிடு போட்டுவிடுங்கள். உங்கள் பாவமெல்லாம் தீர்ந்து, மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுவார் என்பது புது புது ஜோதிடர்கள் சொன்ன ஐதீகம்.
ஆகவே மக்களே, தங்கம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பல்லி கிடைத்தால் அதுவே மகா பாக்கியம்! நேற்று கிடைக்கவில்லை என்றாலும் இப்போதே உங்கள் வீட்டுச் சிலந்தி வலைகளுக்குப் பின்னால் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்... ஒருவேளை உங்கள் அதிர்ஷ்டம் அங்கே 'டிக் டிக்' எனச் சத்தம் கொடுத்துக் காத்திருக்கலாம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications