ராதாவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு! என் தங்கைக்காக யோசித்தேன்! அசிங்கப்படுத்திட்டாங்க! அம்பிகா உருக்கம்
சென்னை: நடிகைகள் அம்பிகா- ராதா இடையிலான சொத்து விவகாரம் இப்போது போலீஸ் புகார் வரை சென்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ராதா தனது 5 செக்கை எடுத்துச் சென்று, அதில் மொத்தம் 46 கோடி தொகையை நிரப்பி அம்பிகாவின் பெயரில் வங்கியில் செலுத்த முயற்சி செய்யப்பட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அம்பிகா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
அதில் அம்பிகா பேசும்போது, செக்கை கொடுத்தது ராதா தான். அதை நிறுத்தி வைத்ததும் அவர்தான். ஆனால் எதற்காக கம்ப்ளைன்ட் கொடுத்தார் என்று எனக்கு தெரியாது. ஏ ஆர் எஸ் பற்றி எல்லாருக்குமே தெரிந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு நான் அங்கு போனபோது போர்டை காணவில்லை. வேறு ஒரு போர்டு இருந்தது. எனக்கு 2,3 நிமிடம் எங்கே இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. தலை சுற்றிவிட்டது. ஒரு மாதிரி பேனிக் கட்டாக் வந்துவிட்டது. நெஞ்சு வலியே வந்தது போல எனக்கு இருந்தது.

நடிகை அம்பிகா பேட்டி
அந்த ஏ ஆர் எஸ் கார்டன் வாங்குவதற்கு முக்கிய காரணம் நான் தான் என்பது இந்த சினிமா உலகத்திற்கு தெரியும். அது குறித்து ஷேர் விஷயங்கள் குறித்த பிரச்சனைகள் நீண்ட நாட்களாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஏ ஆர் எஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதில் அம்பிகா பெயர் உள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு சேர் என்னிடம் உள்ளது. அதைப் பற்றி பேசினதற்கு பதில் இல்லை. இது குறித்து கடந்த ஜூலை மாதம் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறேன்.
அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது அதற்கு 10 முறை சமன் அனுப்பியும் அவங்க வரவே இல்ல. பிறகு வருமானவரி சோதனை நடந்த சமயத்தில் நானும் எனது அம்மாவும் சேர்ந்து போய் என்னுடைய நகைகளை கேட்டோம். அதற்கும் பதில் வரவில்லை. என்னுடைய தங்கையை பொறுத்தவரை தங்கத்தை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிவிடுவார். அவருக்கு தங்கம் என்றால் மைனஸ். அவரிடம் என்னுடைய நகைகள் அவ்வளவு வைத்திருக்கிறார்.
போன் சுவிட்ச் ஆஃப்
அவரிடம் பேசலாம் என்று பார்த்தால் போனை எடுக்கவில்லை. அம்மா இறந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி அஃபிடவிட் போட்டு செட்டில்மென்ட் வாங்கி உள்ளோம். இதெல்லாம் முடிவான விஷயங்கள். நம்ம கிட்ட பேசும்போது அவர் ஒரு மாதிரி பேசுவார். ஆனா வீட்டுக்கு போனதும் வேற மாதிரி பேசுவார். ஏ ஆர் எஸ் கார்டன் விஷயத்தில் அம்மா இறப்பதற்கு முன்பே அவங்க கிட்ட பேசி இருக்கிறோம். அப்போ அவங்க அம்மாவிடம் என்னுடைய பெயரை எடுத்துவிட்டு அக்காவின் பெயரை வைக்க சொல்லியிருந்தார். இதை ராதாவின் கணவர் ராஜசேகர் நாயக் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
கவனமானவர்
ஆனால் இப்போது எங்கள் இரண்டு பேரின் பெயரையும் வைக்காமல் அவருடைய பெயரை மட்டும் வைத்தால் எப்படி இருக்கும்? நான் செத்துப் போய் விடவில்லையே? நான் உயிரோடு தானே இருக்கிறேன்! ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? எல்லோரும் சேர்ந்து தானே வாங்கினோம்? என்னுடைய தங்கை ராதா எப்பொழுதுமே ரொம்ப கவனமா இருப்பார். வீட்டில் இருந்தால் கூட ஹேண்ட் பேக்கை பூட்டு போட்டு பூட்டி வைப்பவர்.
அவர் செக்கை நான் வீட்டில் வைத்துவிட்டு சென்று விட்டேன், கபோர்ட்டில் வைத்து விட்டு சென்று விட்டேன் என்று சொன்னால், கேட்பவர்கள் எல்லாம் எப்படி நினைப்பார்கள்? அந்த செக்கில் கையெழுத்து போட்டுள்ளார். அந்த செக்கை எப்படி என்னுடைய இடத்தில் வைத்து விட்டு போய்விட்டேன் என்று சொல்ல முடியும்? நாங்க ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்திய போது தம்பியிடம் செக் கொடுத்துள்ளார்கள்.
செட்டில்மெண்ட் தொகை
அது 3 செட்டில்மெண்டுக்கான தொகை. ஏ ஆர் எஸ் தொடர்பான செட்டில்மெண்ட் அதில் பங்குதாரருக்கான ஒரு தொகை மற்றும் 1299 கிராம் நகைக்கான ஒரு செட்டில்மெண்ட் தொகை கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக சென்றால் ராதா சிறைக்கு தான் போக வேண்டிய நிலை வரலாம். அதற்காக அவர் செட்டில்மெண்ட் எழுதி கொடுத்து இருக்கிறார்.
நான் இந்த விவாகரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர்கள் எங்கள் மீது 46 கோடி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத் தான் 97 கோடி வர வேண்டும். என்னுடைய தங்கை இங்கே புகார் கொடுத்துட்டு போய்விட்டார் ஆனால் அவருடைய கணவர் மலையாள சேனல்களில் என்னை அவா.. இவா.. என்று மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார்.
கதறி அழுத அம்பிகா
எங்களுடைய சொத்து விஷயத்தில் பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நானும் அவன் இவன் என்று பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்.? ஆனால் நான் என்னுடைய தங்கை கணவர் என்ற மரியாதையுடன் பேசுகிறேன். ஆனால் அவர் தன்னுடைய மனைவியின் அக்கா என்று என்னை மரியாதையுடன் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்னை போய் திருடி என்று என்னுடைய தங்கையை சொல்லிவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நடிகை அம்பிகா அழுது இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
