சிம்ம ராசிக்கு வேலை, தொழிலில் சூப்பர் மாற்றம்.. இனி பண மழையில் நீச்சல் அடிப்பீங்க
ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். எல்லா காரியங்களிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள். ராசிக்கு அதிபதியான சூரியன் அஷ்டமத்தில் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டம். மாதத்தின் முதல் 15 நாட்கள் ஒரு மாதிரியும், இரண்டாம் பகுதி ஒரு மாதிரியும் இருக்கும். ராசியாதிபதி அஷ்டமத்தில் இருப்பது சிறப்பானது அல்ல. தற்போது 5 கிரகத்தின் கூட்டணி இருப்பதால் சில பாதிப்புகளை உண்டாக்கும்.
ராசிக்கு அதிபதி 8 ஆம் இடத்தில் இருந்து, கூட 4 கிரகம் சேர்ப்பதால் தாய், தந்தை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து மாறுபாடுகள் வேண்டாம். அப்படி இருந்தால் பிரிவு உண்டாகும். எந்தவொரு விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. சிலருக்கு அவமானத்தை தரக்கூடிய காலகட்டமாக ஏப்ரல் மாதம் இருக்கும். சிலருக்கு வேலை இழப்பு ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
8 ஆம் இடம் வலுப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. இறை வழிபாடுகள் செய்வது நல்லது. பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் கிடைக்கும் ஆனால் கொஞ்சம் தாமதமாக கிடைக்கும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. பயணம் செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
நீங்கள் விரும்பாத சில சம்பவங்கள் குடும்பத்துக்குள் ஏற்படும். கடமையைச் செய்து கொண்டு போவது நல்லது. செவ்வாய் லாபத்தில் இருப்பதால் புதிய வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சில பேருக்கு ஊர் மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்து வந்து சேரும். மாணவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
பஞ்சாமதிபதியாக உள்ள குரு பகவான் உங்களுக்கு சில அவமானங்களை கொடுத்திருப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஒரு தடையை சந்தித்து மிகுந்த உயர்ந்த நிலையை அடைந்திருப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் தடை ஏற்பட்டு முன்னேறி இருப்பீர்கள். ஜெயித்துக் கொண்டே இருக்கும் காலகட்டமாக இருக்கும். தடையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பாக்கியாதிபதி செவ்வாய் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரும்.
நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல வேலை மாற்றம் உண்டாகும். சொந்த ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டிக் கொண்டு செயல்படுவது நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம் - குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. திருவையாறு அய்யாரப்பனை தர்மசவர்த்தினியை வழிபாடு செய்வது மற்றும் அந்த கோயிலில் அருள்பாலிக்க கூடிய துர்கை, மகாலட்சுமி, காலபைரவரை வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications