அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2025: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. சொத்துகள் வாங்கும் யோகம்
அதிசார குருப்பெயர்ச்சி பலன்: அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கிரக மாற்றம்
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில ராசியினருக்கு சுப பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிசார குருப்பெயர்ச்சி
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குச் செல்வார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருட குருப்பெயர்ச்சி மிகுந்த சிறப்பாகும். குரு கடகத்தில் உச்சமடைந்து மகரத்தில் நீச்சமடைகிறார். நிறைந்த மனதுடன் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகிறார்.
இந்த அதிசார குருப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 8, 11க்கு உரிய குரு பகவான் மூன்றாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். 8க்குரியவர் 3 ஆம் இடத்தில் மறைவதே விபரீத ராஜயோகம் உண்டாகும். ஏதாவதொரு சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். 11க்கு உரியவர் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியும் குரு பகவான் தான். தொழிலிலும் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வங்கிகளின் மூலம் சலுகை கிடைக்கும்.
அனுகூலம்
8க்கு உரியவர் உச்சமாவதால் பெண்களுக்கு மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு மாங்கல்ய பலம், கணவருடைய ஆரோக்கியம், கணவருடைய செல்வம் என அனைத்தும் நன்றாக இருக்கும். வண்டி, வாகனம் விபத்துகளில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். மனதில் இருந்து வந்த அச்ச உணர்வு நீங்கும். தீயணைப்புத் துறை, ராணுவத்தில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
லாபங்கள் அதிகரிக்கும்
லாபங்கள் அபரிமிதமானதாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய மேலதிகாரிகள் அவருடைய தவறை அவரே உணரும்படிச் செய்ய வேண்டும். சகோதரர்களால் மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் உங்களுடைய நிலையை அலுவலகத்துக்கு புரியச் செய்வீர்கள்.
வாய்ப்புகள் வரும்
மேலதிகாரிகளுடன் நேரடி தொடர்புகள், சந்திப்புகள் உண்டாகும். உங்களுடைய வாய்ப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றும் காலகட்டமாக இருக்கும். சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்ரகளால் நன்மைகள் ஏற்படும். 11க்கு உரியவரும் உச்சம் பெறுவதால் மாமனாரின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
வாழ்க்கை மாறும்
சமூகத்தில் பெரிய நிலையில் இருக்கும் மனிதர்களால் உங்கள் வாழ்க்கை மாறும். புதிய அறிமுகத்தால் உங்களுடைய வாழ்க்கை மாறும். மேலதிகாரிகளின் சந்திப்பால் அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். வீடு, இடம், நிலம் வாங்கும் யோகம் உள்ளது. அற்புதமான காலகட்டம் என்பதால் இந்த அற்புதமான காலகட்டத்தில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications