தடைகளை தகர்த்தெறியும் கடக ராசி.. பண வரவு சூப்பர்.. முக்கியமான பிரச்சனை தீரப்போகுது
August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு சூரிய பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். கடந்த இரண்டரை வருடங்களாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இந்த மாதத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். தொழில் ஆரம்பிப்பது, புதிய முதலீடுகளை செய்வது என நீங்கள் எந்த காரியங்களை எடுத்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
புதாதித்ய யோகம்
ராசியில் குரு பகவான் இருப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருப்பதால் வீட்டில் நிறைய சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். கிரகப்பிரவேஷம், திருமண யோகம், வளைகாப்பு என அடுத்தடுத்து மங்களகிரகமான நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய பகவான் ஆட்சி பெற்றிருப்பதோடு புதன் பகவானும் இணைந்து புதாதித்ய யோகம் உண்டாகியுள்ளது.
தடைகள் நீங்கும்
உங்களுக்கு தாய்மாமனின் ஆதரவு கிடைக்கும். பாதகாதிபதியான சுக்கிரன் கன்னியில் நீச்சமாகியிருக்கிறார். அதனால் இனி அனைத்து வித தடைகளும் தவிடு பொடியாகும். இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியனார் கோவில் செல்வது, சூரிய பகவானை வழிபாடு செய்வது ஏற்றததைத் தரும். கோதுமை, தானியங்களை புறாக்களுக்கு போடுவது நன்மை பயக்கும்.
கடன் தீரும்
இந்த காலத்தை பயன்படுத்தி கிடைக்கும் பணத்தை சேமிப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு காரியங்களில் வெற்றி அடையும் யோகம் உண்டாகும். பசு மாட்டுக்கு வாழைப்பழம் தானமாக கொடுப்பது, கோ பூஜை செய்வது ஏற்றத்தைத் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும்.
அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை
அதிர்ஷ்ட தேதிகள் - ஆகஸ்ட் 4 ஆம் தேதி சஷ்டி தினம்
அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 24, 25
வழிபாடு - சூரிய பகவான்
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட திசை - கிழக்கு


Click it and Unblock the Notifications
