Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு உழைப்பால் முன்னேறும் யோகம்.. பணம் கொட்டும்.. நண்பர்களிடம் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

august-month-rasi-palan-2025-kumbam-aquarius-rasi-people-will-get-fortuned-and-good-benefits-dur

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசியில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். சந்திரனின் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். மனதில் ஏதாவதொரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். குரு சண்டாள யோகம் நடந்து கொண்டிருக்கிறது. ராசியில் இருக்கும் சந்திரன் மீது ராகு செல்லக்கூடிய காலகட்டம். மாயங்களை நம்ப ஆரம்பிப்போம். இந்த காலகட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.

உழைப்பால் உயர்வு

நவம்பர் மாதம் வரை எவ்வளவு உழைக்கிறீர்களோ அந்த உழைப்பின் பயனை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அனுபவிப்பீர்கள். வேலையில் பிரச்சனை, பணப் பற்றாக்குறை, வேலையில் திருப்தியின்மை இருப்பவர்கள் கடின உழைப்பை போட்டால் அதற்கான பலன்கள் கட்டாயம் கிடைக்கும் காலகட்டம். உழைப்பின் மீதான உங்கள் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தை இப்படியே கொண்டு செல்லலாமா, மாற்றி கொண்டு செல்லலாமா என்று யோசனை செய்ய ஆரம்பிப்பீர்கள்.

நட்புகளில் கவனம்

தவறான நபர்களின் நட்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உழைப்பில் மட்டும் 100 சதவீதம் கவனம் செலுத்துவது நல்லது. 2 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிலருக்கு வேலைமாற்றம் ஏற்படும். வார்த்தைகளில் கோபம், சலிப்பை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு முன்னேற வேண்டும். குரு பகவான் பார்ப்பதால் நல்ல தன லாபம் கிடைக்கும்.

பண நெருக்கடி தீரும்

சுக்கிரன் உங்கள் யோகாதிபதி. உங்கள் பாக்கியாதிபதியும், லாபாதிபதியும் இணைந்து பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றனர். இதுவரை இருந்து வந்த பண நெருக்கடிகளில் இருந்து வெளிவருவீர்கள். திருமணத்துக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அருமையான வரன் அமையும். சுபச் செய்திகள் நடைபெறும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நல்ல காரியங்களை முன்னின்று நடத்திக் காட்டும் யோகம் உண்டாகும்.

ஆரோக்கியம்

6 ஆம் இடத்தில் புதன் பகவான் இருப்பதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். உடம்பில் அலுப்பு, வலி, வாயு கோளாறு போன்றவை ஏற்படும். சிலருக்கு தோல் பாதிப்பு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மனதில் குழப்பம் இந்த மாதம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குப் பிறகு கணவன், மனைவி உறவில் முன்னேற்றம், அந்நியோன்யம் ஏற்படும்.

கடன் கிடைக்கும்

கணவன் வீட்டாருக்கு உங்களுடைய மதிப்பு மரியாதை புரியும் காலகட்டம். அரசு வேலைகள் கிடைக்கும் யோகம் உள்ளது. சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழிலுக்குத் தேவையான கடன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் யோகம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அற்புதமான மாதமாக இந்த மாதம் இருக்கும்.

வழிபாடு

சுக்கிர பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால் பெண் தெய்வ வழிபாடுகள் அற்புதமான நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். வாராஹி, மகாலட்சுமி வழிபாடு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+