August Matha Palan 2025: கடகம், சிம்மம், கன்னி ராசிக்ககான பலன்கள்.. அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

august-month-rasi-palan-2025-what-kind-of-benefits-will-get-kadagam-simmam-kanni-rasi-people-in-t

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியில் புதன் பகவான் அமர்ந்திருப்பதால் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வரும். ஆனால், புதிய ஆட்களை நம்பி வியாபாரத்தை தொடங்காமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது நன்மையை ஏற்படுத்தும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.

பணம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக மாறும். ஆகஸ்ட் 17க்குப் பிறகு பண வருமானம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் வரும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களால் சிக்கல் வரும் வாய்ப்புள்ளது. அலைந்து திரிந்து செய்யும் தொழில் அமைப்புகள் ஏற்படும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சொத்துகள் வாங்கும் யோகம், கார் வாங்கும் யோகம் உண்டாகும். வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சனி வக்கிரமாக இருப்பதால் 2 வது திருமணம் செய்ய ஏற்ற நிலை இல்லை. திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பது, முகூர்த்தம் குறிப்பது போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலை மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் கேது பகவான் இருப்பதால் ஆகஸ்ட் முதல் பாதியில் மன குழப்பங்கள் ஏற்படும். தனியார் துறையில் உயர் பதவி, அரசு வேலை, புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் அதிகாரம் தோன்றும். அரசு அதிகாரி, உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது வம்பு, வழக்குகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. வீடு கட்டும் யோகம் உண்டாகும். நிலம், இடம் வாங்கும் வாய்ப்புள்ளது. தன வரவு ஏற்படும்.

சகோதரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். புதிய கார் வாங்கும் யோகம், நல்ல பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். புதன் லாபத்தில் இருப்பதால் அற்புதமான பண வரவு உண்டாகும். தொழில், வியாபாரம், வேலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வெளிநாடு யோகம் உண்டாகும்.

அலுவலகத்தில் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விபரீத ராஜயோகம் உண்டாகும். வேலை மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. காப்பீடு நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம். துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் துணைக்கு நல்ல வருமானம் ஏற்படும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும். உங்கள் வேலையிலும் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு யோகம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமண யோகம் கைகூடும். பதவி உயர்வு, அப்பார்ட்மென்டில் பிளாட் வாங்கும் முயற்சி போன்றவை உண்டாகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.

பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாகனங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 4 ஆம் இடத்துக்கு அதிபதியான குருவும் அமர்ந்திருப்பதால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். கன்னி ராசிக்கு புதிய கார், புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

காதல் விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும். வெளிநாட்டில் வேலைக்குச் செல்வோர் ஒருமுறைக்கு இருமுறை எல்லா விஷயங்களையும் சரிபார்த்துக் கவனமாக செல்வது நல்லது. பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். அப்பாவின் உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+