கன்னி ராசிக்கு ஆவணியில் ராஜயோகம்.. பணவரவு, திருமண யோகம், அதிர்ஷ்டம் தேடி வரும்
ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் கன்னி ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசியினருக்கு ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். சூரியனோடு சேர்ந்து புதன் புதாதித்ய யோகத்துடன் ராசிநாதன் கேதுவோடு அமர்ந்திருக்கிறார். ராசிநாதன் ராசிக்குள் பிரவேசிக்கும் மாதமாக செப்டம்பர் மாதம் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்திருக்கின்றனர்.
இறைவனை உணர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அப்பா, கணவன், மாமனார், மகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. ஒற்றை தலைவலி, கால் நரம்பு பிரச்சனை, கால் வலி, பாதம் வலி வருவதற்கான வாய்ப்பு ஆவணி மாதத்தின் முதல் 15 நாட்களில் வருவதற்கான வாய்ப்புள்ளது. முதுகு தண்டுவடத்திலும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
செலவுகள் அதிகரிக்கும்
யோசனைகள் அதிகரிக்கும். ஏதாவது ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். முதல் 15 நாட்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள். இயற்கை பொருள்கள் மீது மோகம் அதிகரிக்கும்.
செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் ராசியில் செவ்வாயின் பார்வையில் சஞ்சாரம் செய்வதால் தைரியம் பிறக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நிறைய பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வீர்கள். பேனா, பரிசுகள் கிடைக்கும் காலகட்டம். பார்ட்னர்ஷிப்பின் மூலமாக நன்மைகள் நடக்கும். திருமண யோகம் உண்டாகும். திருமண வரன்கள் கிடைக்கும். விரும்பியவற்றை எல்லாம் செய்து மகிழ்வீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். பாம்பு கண்ணில் தென்படும் வாய்ப்புள்ளது. நிம்மதியற்ற தூக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்தை செய்ய நினைத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நன்மை பயக்கும்.
முதல் 15 நாட்கள் பேச்சு, செயலில் நிதானமாக இருப்பது நல்லது. வாக்கு கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் சேர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது ஏற்றத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
