Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandra Grahan Rasi Palan: ரிஷப ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்.. பண வரவு அள்ளும்

Subscribe to Oneindia Tamil

சந்திர கிரகணம் 2026: மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் ரிஷப ராசியினருக்கு ஏற்படப்போகும் மாற்றம், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 மார்ச் மாதம் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்றும், ஒளிக் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒளிக் கிரகங்களுக்கு ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய கிரகஸ்தம் கிரகணம் ஆகும். கேது பகவானால் சந்திரனுக்கு ஏற்பட்கூடிய கிரகணமாகும்.

Chandra grahan

மார்ச் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு பல மாற்றத்தை இந்த கிரகணம் ஏற்படுத்திக் கொடுக்கும். பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சிம்ம ராசி, கடக லக்னத்தில் கிரகணம் நடைபெறுகிறது.

பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகி 5 நட்சத்திரத்தினருக்கு கிரகணம் பிடிப்பதால் கிரகண சாந்தி செய்து கொள்வது நன்மை பயக்கும். சந்திர கிரகணத்தன்று ரிஷப ராசியினருக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் (Rishabam Rasi Palan)

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சிம்ம ராசியில் சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. ராசிக்கு 10 ஆம் ராகு, சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்திருக்கின்றன. 11 ஆம் ஸ்தானத்தில் சுக்கிரனும், சனியும் உள்ளனர். இது மிகவும் அற்புதமான அமைப்பாகும். நிதி சார்ந்த விஷயங்களில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நல்ல பண வரவுகள் உண்டாகும்.

கண்திருஷ்டி

நிறைய உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் நிறைய கண் திருஷ்டி ஏற்படும். மிக கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜாயிண்டுகளில் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தனவரவு

லாபத்தில் சுக்கிரன், ராகு சேர்க்கை உள்ளதால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். ஜவுளி தொழில், கம்பியூட்டர் துறை, கெமிக்கல் இன்டஸ்ட்ரி, பார்மா துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம், தொழில் வளர்ச்சி ஏற்படும். இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் அற்புதமான தன வரவைக் கொடுக்கும். பிள்ளைகளுக்கு பெரிய முன்னேற்றம் தரும் யோகம் உண்டாகும்.

வளர்ச்சி

நல்ல அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும். சிஏ படிப்பவர்கள், காமர்ஸ், அட்மினிஸ்டிரேஷன் படிப்பவர்களுக்கு பெரிய வளர்ச்சி ஏற்படும். ஆர்டிபீசியல் இன்டெலிஜன்ஸ் எடுத்துப் படிக்கம் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எலக்ட்ரானிக் துறையைச் சேர்ந்தவர்கள் பெரிய வளர்ச்சியை அடையக்கூடிய காலம்.

வாஸ்து

4 ஆவது ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், கேது இணைகின்றனர். சந்திரன் கேது இணைவால் பழைய வீடுகளை கொடுத்துவிட்டு புதிய வீடுகளை வாங்குவீர்கள். சில வீடுகளில் வாஸ்து தோஷம் இருக்கும். வாஸ்து தோஷத்தை வீட்டை இடித்துதான் சரிசெய்ய வேண்டும் என்று இல்லை. சிறிய சிறிய எளிமையான வழிகளில் நிவர்த்தி செய்யலாம்.

வழிபாடு

4 ஆம் இடத்தில் சந்திரன், கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புரோமோஷனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். அதற்கான உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. கிருஷ்ணர் மந்திரத்தை சொல்லி சுவாமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+