செவ்வாய் பெயர்ச்சி 2021: காதல் நாயகன் சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாய் - பலன்கள்
செவ்வாய் பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாயினால் யாருக்கு என்ன பாதிப்பு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகிறார். பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான அம்சங்களும் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளும் ஏற்படும். சுக்கிரன் வீட்டில் ராகு உடன் இணையும் செவ்வாயினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
இந்த செவ்வாய் பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் சுக்கிரன் வீட்டில் ஏற்கனவே உள்ள ராகு உடன் செவ்வாய் இணைகிறார் கூடவே குருவின் பார்வையும் செவ்வாய்க்கு கிடைக்கிறது. தேர்தல் அறிவிப்புகள் வரப்போகும் இந்த நேரத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
யுத்த கிரகம் செவ்வாய் அசாதாரணமான தைரியசாலி. மேஷம் ராசியில் இருந்த செவ்வாய் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு உடன் இணைவதால் நெருப்பு, மின்சாரம் தொடர்பான செயல்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக தேவை. அரசியல்வாதிகள் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்கிறார். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை வணங்கி தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். மன நிம்மதி

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். பண வருமானம் அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். குரு பகவானின் நேரடி பார்வையும் கேதுவின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய், ராகுவின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

மிதுனம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் வீட்டில் கணவன் மனைவி இடையே எதிர்வாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்லவும்.
எதிர்பாலின நட்புக்களிடம் கவனம் தேவை.

கடகம்
லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. லாபத்தில் உள்ள செவ்வாய் மீது குரு பார்வை விழுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குரு மங்கல யோகம் உடல் ஆரோக்கியத்தில் அற்புதத்தை கொடுக்கும்.

சிம்மம்
சூரியனின் தளபதி செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் அமையும். தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். குரு பகவான் செவ்வாயை பார்ப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உடன் செவ்வாய் இணைவது உங்களுக்கு சிறப்பு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல் நலப்பிரச்சினைகள் தீரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டு அதிபதியும் களத்திர ஸ்தான அதிபதியுமான செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். ராகு உடன் செவ்வாய் இணைந்திருப்பது கூடவே குருவின் பார்வை கிடைப்பதால் பாதிப்புகள் சற்றே குறையும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே ஜென்ம கேது உங்களுக்கு உள்ளது. ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் நேரடியாக அமர்ந்து ராசியில் உள்ள கேதுவை பார்க்கிறார். வீட்டில் தம்பதியரிடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் இளம் வயதில் உள்ளவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். அதே நேரத்தில் உங்கள் ராசி நாதன் குரு பகவான் பார்வையிடுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசியில் உச்சமடையும் செவ்வாய் பகவான் இப்போது ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் ராகு உடன் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் நீசம் பெற்றுள்ள குருவின் நேரடி பார்வையில் விழுகிறார் செவ்வாய் பகவான். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். கூடவே ராகுவும் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். குரு பகவான் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகமும் கை கூடி வருகிறது. செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மீனம்
செவ்வாய் பகவான் அடுத்த சில நாட்களில் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு முன்றாம் வீட்டில் பலமாக அமர்ந்துள்ள ராகு உடன் இணைந்து சஞ்சரிக்கப் போகிறார். இது யோகமான அமைப்பாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்களுக்கு அனைத்திலும் யோகத்தை தரக்கூடியவர். செவ்வாய் ராகு உடன் இணைகிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு கிடைப்பதால் இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வருமானம் அதிகரிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications