Chithirai Matha Palan: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்.. என்ஜாய்
Chithirai matha palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மேஷ ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் நாளை அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் (Mesham Rasi Palan)
மேஷ ராசியினருக்கு அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். யாரிடத்திலும் கோபம், தர்க்கம் வைத்துக் கொள்ளாமல் அமைதியாக கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. நல்ல பெயர், புகழ், கெளரவம் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும்.
பயணம்
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும் காலகட்டம். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அதிகரிக்கும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய நிலையில் இருக்கும் பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
தொழிலில் ஜாக்பாட்
தொழில் ரீதியாக ஏற்றங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் மாறும். புதிய தொழிலை தொடங்கும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக யோசித்து வந்த கூட்டுத் தொழிலை தைரியமாக எடுத்து செய்வீர்கள். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். இளமைத் திரும்பக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் நம்பிக்கை ஏற்படும்.
பதவி உயர்வு
உங்களுக்காக இனி வாழத் தொடங்குவீர்கள். கெளரவம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இடையே அந்நியோன்யம் ஏற்படும். பிள்ளைகளின் நீண்ட நாள் பிரச்சனைகள், ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். அவர்களுடைய கனவு நிறைவேற உதவுவீர்கள். அவர்களுடைய கல்வி, வேலை, தொழில், வியாபாரம், வண்டி வாகனம், சுபகாரியங்கள் போன்றவற்றில் அனுகூலம் ஏற்படும்.
வாகன யோகம்
நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். வண்டி, வாகனங்களை உங்களுக்குப் பிடித்த மாதிரி வாங்குவீர்கள். குலதெய்வ பயணங்கள், உள்ளூர், வெளியூர் பயணங்கள், தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பாட்டு கேட்பது போன்ற நிம்மதியான முயற்சிகளை கையில் எடுப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம்.
வழிபாடு
வயிறு, தலைவலி, தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தூக்கமின்மை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அனுமன் சாலிஷா, காரியசித்தி மாலை தினமும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். மேஷ ராசியினருக்கு ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications