Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்திரை மாத ராசி பலன் 2020 - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள் பரிகாரங்கள்

சித்திரை மாதம் சூரியன் மேஷம் ராசியில் உச்சமடையும் மாதம் இந்த மாதம் கிரகங்கள் அற்புதமாக அமைந்துள்ளது. மேஷம் முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரிய பகவான் மேஷம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சித்திரை விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை மாதம் வசந்தங்கள் நிறைந்த மாதமாகும். மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சித்திரை சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான். மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சித்திரையில்தான் என்கின்றனர். நவமி திதியில் ஸ்ரீராம பிரானாக அவதாரம் எடுத்து மக்களைக் காத்தார் பகவான் விஷ்ணு. திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான்.

சித்திரை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் சூரியன் உச்சம், ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி செவ்வாய் உச்சம் குரு நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார் மிதுனம் ராசியில் புதன் நீசம் பெற்றிருக்கிறார்.

இந்த மாதம் கிரக மாற்றங்களை பார்த்தால் சித்திரை 11ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு நகர்கிறார். 26ஆம் தேதி ரிஷபம் ராசிக்கு நகர்கிறார். 21ஆம் தேதி செவ்வாய் கும்பம் ராசிக்கு நகர்கிறார். 28ஆம் தேதி சனி வக்ரம் ஆரம்பம். 30ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் ஆரம்பம். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றங்களினால் மேஷம் முதல் கன்னி வரை ஆறு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் சூரியன் இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, குரு, செவ்வாய், விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்க ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இப்போது உள்ள சூழ்நிலையில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் ஆன்மீக பயணம் செல்ல முடியலையே என்ற கவலை வேண்டாம். வீட்டிலேயே இறைவனை மனதார நினைத்து வணங்குங்கள். இந்த மாதம் நீங்க எதிர்பார்த்த பதவி உயர்வு சிறு தடைகளுக்குப் பின்னர் கிடைக்கும். சில விசயங்களில் அனுசரித்து செல்லுங்கள். திருமண சுப காரியங்கள் பேச இது ஏற்ற மாதம், சுபமாக முடியும். அதிகம் கோபம் வேண்டாம். பேச்சில் கனிவோடு பேசுங்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு மாறும் சூழ்நிலை வரும். மாத பிற்பகுதியில் செவ்வாய் இடம் மாறுகிறார். வீடு மனை வாங்க பேசி வைத்துக்கொள்ளலாம். தாய்மாமனுக்காக செலவு செய்வீர்கள் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். மகாலட்சுமியையும் மகா விஷ்ணுவையும் வணங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் சூரியன், ராசியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு, செவ்வாய், லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். அப்பாவிற்காக செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையாக பேசுங்கள் சண்டைகள் வேண்டாம் சமாதானமாக பேசுங்கள். விரைய செலவுகள் வேண்டாம் சிக்கனத்தை கடைபிடியுங்கள். சேமிப்பு இல்லாவிட்டால் மாத கடைசியில் பணத்திற்காக திண்டாட வேண்டியிருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். பங்குச்சந்தை, தரகு கமிசன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு பேசலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

இந்த மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு, பத்தாம் வீட்டில் புதன் லாப ஸ்தானத்தில் சூரியன், விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. பண விசயங்களில் சிக்கனமாக இருங்கள். சவால்களை சந்திப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அஷ்டமத்து சனி, குரு ஆட்டிப்படைக்கு உணவு விசயத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. சந்தோஷமாக இந்த மாதத்தை கடத்துங்க. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி, குரு ஒன்பதாம் வீட்டில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும். திடீர் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க. வீட்லதானே இருக்கோம் நேரங்கெட்ட நேரத்தில சாப்பிடலாம்னு நினைக்காதீங்க. அது உங்க உடம்புக்கு நல்லதில்லை. இப்போ இருக்கிற சூழ்நிலையில எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க அது உங்களுக்கும் நல்லதில்லை மத்தவங்களுக்கும் நல்லதில்லை. வியாபாரம் செய்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் சரக்குகள் விற்று தீரும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தினை பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, பத்தாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். திடீர் பணவரவு வரும். விஐபிக்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் உடனே கவனிங்க. இந்த மாதம் உங்க நிதிநிலைமை நன்றாக இருக்கும். சேர்த்து வைத்த பணம் இப்படி செலவாகுதேன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு பழைய கடன்கள் எல்லாம் திரும்ப கிடைக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். வீட்டில் இருந்தே செய்யக்கூடிய பிசினஸ் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். புதிய முதலீடுகள் எதுவும் செய்யாமல் இருப்பதை வைத்து சிறப்போடு லாபம் சம்பாதிப்பீர்கள். குடும்பத்தில் செல்வம் செல்வாக்குடன் சுபிட்சமாக இருப்பீங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கு இன்றைய தினம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் பத்தாம் வீட்டில் ராகு ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் சூரியன் நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் பணவரவு சிறப்பாக இருக்கும். சூரியன் எட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருக்கணும் கூடுமானவரைக்கும் வெளியே போகாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். உங்க பொருளாதார தேவைகள் பூர்த்தியடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வேண்டாம். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+