கடக ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு, சுக்கிரன்.. வெளிநாடு செல்லும் யோகம்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது கடக ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் கடக ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்
கடகம்
கடக ராசிக்கு சித்திரை மாதத்தில் இந்த மாத தொடக்கத்தில் ராசியாதிபதி 4 ஆம் இடமான சுக ஸ்தானத்திலும், சுக ஸ்தானத்தின் அதிபதி பாக்கியத்திலும் இருப்பதால் உங்களுடைய எண்ணம், சிந்தனை, செயல்கள் எல்லாம் சுகத்தையும், பாக்கியத்தையும் நோக்கியுமே இருக்கும். குரு லாப ஸ்தானத்திலும், சுக்கிரன் சுக அமைப்பிலும் இருப்பதால் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும்.
மாற்றம் முன்னேற்றம்
மனதில் இருந்து வந்த பிரச்சனைகள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீரும். தன்னம்பிக்கை உண்டாகும். எதிலும் ஜெயிக்கலாம் என்ற எண்ண ஓட்டும் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழிலில் மாற்றம் ஏற்படும். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். நல்ல நல்ல தன்மைகள் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்
இரண்டரை வருடங்களாக அழுத்திக் கொண்டிருந்த அஷ்டம சனி முடிவதால் கடக ராசிக்கு இனி விடுதலை பெற்ற உணர்வு ஏற்படும். இதுவரை சனி பகவான் இரண்டாம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததால் குடும்பத்தில் இருந்த அலைச்சல், கருத்து வேறுபாடுகள் போன்றவை அனைத்தும் விலகும். குடும்பாதிபதி தற்போது வலிமையாக உள்ளதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
ஆதாயம், அதிர்ஷ்டம்
சுயநலமாக இருந்த நீங்கள் இனி பொதுநலமாக சிந்திப்பீர்கள். உங்கள் பேச்சை கேட்காமல் இருந்த நிலை எல்லாம் மாறம், பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அலைச்சல், பயணங்கள் இனி அனுகூலம், ஆதாயத்தை தரும். இடம், நிலம் வாங்கியிருப்பவர்களுக்கு அதன் மூலம் ஆதாயம் உண்டாகும். இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
வெற்றி
அரசின் மூலமாக அனுகூலம் உண்டாகும். தன வரவு உண்டாகும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், உறவுகளால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சு வார்த்தைகள் மூலம் சரிசெய்வீர்கள். குழந்தைகள் மூலமாக நன்மை உண்டாகும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் பெருகும். அரசு சார்ந்த விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
சுபக்கடன்கள், வெளிநாடு யோகம்
கடக ராசி மாணவர்களுக்கு இனி நல்லவை எல்லாம் அமையும் காலகட்டமாக இருக்கும். கடனால் பல பிரச்சனை சந்தித்தவர்கள் படிப்படியாக கடனை அடைப்பீர்கள். கடன் அதிக அளவில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 12 ஆம் இடத்தில் அமர்ந்து 6 ஆம் வீட்டை குரு பார்க்கவுள்ளதால் கடன் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வாங்கும் கடன்களை சுப கடன்களாக மாற்றிக் கொள்வது நல்லது. திருமண யோகம் கைகூடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்து சேரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications