மிதுன ராசிக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம்.. மே 7ம் தேதி வரை இந்த ஒரு விஷயத்தில் மிக கவனம்
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்த்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மிதுன ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மிதுன ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் ராசியாதிபதி 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதி, பாக்கியாதிபதியும் 10 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் தொழில் சார்ந்ததாகவே இருக்கும். தொழில் மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோகம் மாற்றம் ஆகியன உண்டாவதற்கான காலகட்டமாக இருக்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் நல்ல மாற்றங்களாக இருக்கும்.
தொட்டது துலங்கும்
முயற்சி ஸ்தானதிபதி லாப ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்று வலிமையாக இருக்கும்போது நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் ஈடேறும். அரசு அரசு சார்ந்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு துறையை சார்ந்தவர்கள், கல்வி நிலையங்கள் வைத்திருப்பவர்களுக்கு அனுகூலம் கொடுக்க கூடிய மாதமாக இருக்கும்.
சொந்த வீடு, வாகனம்
வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான அமைப்பு உண்டாகும். கடனில் இருந்து விடுபடும் காலகட்டமாக இருக்கும். எதை வாங்கினாலும், எதை செய்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. ஆவணங்கள் தொடர்பான விஷயங்கள், எழுத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சித்திரை மாதம் 24 ஆம் தேதி வரைக்கும் புதன் பகவான் ராகுவுடன் சேர்ந்திருக்கப் போகிறார். யோசித்து, நிதானமாக செயல்படுவது நல்லது.
வெற்றி மேல் வெற்றி
மே 7 ஆம் தேதிக்குப் பிறகு புதன் லாப ஸ்தானத்தில் அமருவதால் நினைத்தது நடக்கும். எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். தன வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எந்த இடத்தில் எதை பேச வேண்டும், பேசக்கூடாது என்று மெருகேற்றக் கூடிய மாதமாக இருக்கும்.
அதிர்ஷ்டம்
3 ஆம் இடம் வலுப்பெறக்கூடிய மாதம். முயற்சி ஸ்தானம் உங்களுக்கு தைரியத்தை வீரியத்தை கொடுக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இடம் விட்டு இடம் நகரும் அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தந்தையின் மூலம் அனுகூலம், ஆதாயம் உண்டாகும். அரசின் மூலம் வருமானம், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பதவி, தன்னம்பிக்கை
சூரியன் என்பது அரசு. அரசின் மூலமாக வருமானம், ஒப்பந்தங்கள் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. தன்னம்பிக்கை உண்டாகும். நீங்கள் யார் என்று வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் காலகட்டமாக இருக்கும். குரு பகவான் விரைய ஸ்தானத்தில் இருந்து 4 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சுப விரையம் செய்வீர்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications