Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி.. ஆனாலும் பணம் கொட்டும்.. கடன் மட்டும் வேண்டவே வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது சிம்ம ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

யோகம்

பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

chithirai-month-zodiac-sign-lets-see-what-kind-of-benefit-wil-get-simmam-rasi-people-in-the-chithi

பெயர்ச்சி

இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.

இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்க ராசியதிபாதியாக இருக்கக்கூடிய சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உச்ச பலத்தில் வலிமையாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக, தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சிம்மத்துக்கு அஷ்டம சனி ஆரம்பித்துள்ளதால் மனதில் சில குழப்பங்கள் உண்டாகும்.

கவனம்

எந்த ஒரு முடிவுகளை எடுத்தாலும் அதில் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் யாரிடமாவது ஏமாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய விஷயங்களைச் செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தனத்தை கையாளுகிற விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு விஷயத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பண வரவு அதிகரிக்கும்

குரு 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். ஆனால், அதனை கையாளுகிற விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியோன்யத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அஷ்டம சனியில் மனக் குழப்பம் உண்டாகும். வெளியில் வீரமாக இருந்தாலும் மனதுக்குள் ஒரு போராட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

எச்சரிக்கை

குரு பகவான் 4 ஆம் இடத்தை் பார்ப்பதால் தாய் நன்றாக இருக்கப் போகிறார். தாயால் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். தாய் மூலமாக சொத்துகள் வந்து சேரும். அலைச்சல்கள், பயணங்கள் உண்டாகும். 5 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் குழந்தைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால், சித்திரை 31க்குப் பிறகு குரு பெயர்ச்சியாவதால் பெரிதாக பயப்படத் தேவையில்லை. சித்திரை மாதம் முழுவதும் குழந்தைகள் விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

கடன் வேண்டாமே

கடன் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 6க்குரியவர் 8ஆம் இடத்தில் இருப்பதால் கடனால் வலி உண்டாகும். அதிகளவில் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 6 ஆம் இடம் என்பது நோய் என்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்.

பொறுமை நல்லது

வழக்கு போன்ற விஷயத்துக்குள் போகாமல் இருப்பது நல்லது. வேலையில் அழுத்தம் உண்டாகும். அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு வேலையை விட்டு விட்டு வெளியில் வரக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படும். அஷ்டம சனி இருந்திருப்பதால் உங்களை ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+