துலாம் ராசியை தூக்கிவிடும் சித்திரை மாதம்.. சகல யோகமும் கொட்டும்.. இனி எல்லாமே சக்சஸ்

Subscribe to Oneindia Tamil

சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது துலாம் ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

Chithirai Thulam

யோகம்

பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீச்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி

இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீச்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.

இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் துலாம் ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

துலாம்

சித்திரை மாதத்தில் சகல யோகங்களையும் பெறப் போகிறீர்கள். ராசியில் சந்திரனும், எட்டாம் இடத்தில் குரு இருப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். குரு பெயர்ச்சிக்கு பிறகு அவர் நேரடியாக உங்கள் ராசியினை பார்ப்பது இன்னும் நல்ல அமைப்பாகும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சலுகை

உங்கள் ராசி அதிபதியான சுக்கிரன் உச்ச பலத்தோடு வலிமையாக உள்ளார். உத்யோகத்தில் உயரதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளையும், அங்கீகாரங்களையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம்

சனி, புதன் இணைந்திருப்பதும் நல்ல பலன்களை கொடுக்கும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நீண்ட காலமாக திட்டமிட்ட உங்கள் பழைய சொத்துகளை விற்பனை செய்வீர்கள். கடன் சுமை குறையும். உத்யோகம், தொழிலில் இட மாற்றங்கள் ஏற்படும். வேற்று மொழி பேசும் நபர்களால் சிறப்பான அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

சொத்து

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் அடுத்தகட்டத்துக்கு செல்வீர்கள். சனி ஆறாம் இடத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையில் நல்லதுதான். வீடு, நிலம் வண்டி, வாகனம் வாங்குவீர்கள். சுப விரயம் உண்டாகும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் அந்த பாக்கியம் கிடைக்கும்.

தன்னம்பிக்கை

குழந்தைகளால் பெருமை கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்தே நல்ல தகவல்கள் கிடைக்க தொடங்கிவிடும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்மறை சிந்தனைகள் விலகி தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனவேதனைகள் குறையும். குருப்பெயர்ச்சி நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

செல்வாக்கு

பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்வது நல்ல பலன்களை கொடுக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு நல்ல ஆதாயத்தை கொடுக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.

கவனம்

பணத்தை கையாள்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சிந்தித்து செயல்பட வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலத்த வேண்டும். உங்களின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அம்மன் வழிபாடு அருமையான நற்பலன்களை அள்ளி கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+