சிங்கமாக புறப்படும் விருச்சிகம் ராசி.. இப்படி ஒரு மாற்றமா? – சித்திரை மாதத்தில் சரவெடி
சித்திரை மாத ராசி பலன்: தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களில் பெயர்ச்சியும் உள்ளன. இது விருச்சிகம் ராசிக்கு தரவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
யோகம்
பொதுவாக சித்திரை பௌர்ணமி விரதத்துக்கு சிறந்த மாதம். தங்கம் வாங்குவதற்கும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சிறந்த காலம். இந்த மாதத்தில் சுக்கிரனும், வியாழனும் பரிவர்த்தனை நிலையில் உள்ளனர். சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சனி சொந்த வீட்டில் இருக்கிறார். நீட்சபங்க மற்றும் பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன. கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.

பெயர்ச்சி
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகிய 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 26.4.2025 தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். குரு பகவான் 11.5.2025 மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 30.4.2025 புதன் நீட்ச நிலையில் இருந்து விலகி மேஷ ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இந்த சித்திரை மாதத்தில் நிகழவுள்ளது. மேலும், 4.5.2025 - 28.5.2025 அக்னி நட்சத்திர காலகட்டம். இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் விருச்சிகம் ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு சித்திரை மாதம் அமோகமான பலன்களை தரப்போகிறது. வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். ராசி மீது வியாழன் பார்வை வருகிறது. ஐந்தாம் இடத்தில் புதன் - சுக்கிரன் யோகம் வருகிறது. வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் குழந்தைகள் விஷயத்தில் இருந்த மனக்கவலைகள் நீங்கும்.
உற்சாகம்
குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழில் மிக சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் உயரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தெளிவு, உற்சாகம் அதிகரிக்கும். வீண் விரயம் சரியாகும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் எல்லாம் தற்போது நிறைவேறும்.
பணவரவு
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. மேலும் குரு பார்வையால் அனைத்து பிரச்னைகளும் தீரும். பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் உங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.
பூர்விகம்
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், வீடு, வண்டி ஆகிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளியூர், வெளி மாநில, வெளிநாடுகளில் இருப்போர் பூர்விகத்துக்கு வருவார்கள். தாய் வழி உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். தாய் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அரசு
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதுக்கு ஏற்றபடியான உத்யோகம், தொழில் மாற்றங்கள் நிகழும். அரசு மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த தடைகள் விலகி அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். தந்தையுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
கவனம்
சனிப்பார்வை காரணமாக பணம் கையாள்வதில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் அவ்வபோது கருத்து வேறுபாடு வரும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கூடுதல் அக்கறை தேவை. ராகுவால் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். பிரதோசத்தில் நந்தி வழிபாடு சிறப்பான பலன்களை கொடுக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications